சென்னையில் மழை... விமான சேவையில் பாதிப்பு!
சென்னையில் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு தொடங்கி தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னையின் புறநகர் பகுதியிலும் கன மழை பெய்தது. நள்ளிரவு முதல் அதிகாலை வரை நீடித்த மழை காரணமாக, சென்னை விமான நிலைய சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய எட்டு விமானங்கள் தாமதமானதால் பயணிகள் அவதிக்குள்ளானதாக தகவல் தெரிவிக்கின்றன. மேலும் தொடர்மழை காரணமாக சென்னை வந்த நான்கு விமானங்கள் தாமதமாக தரையிறங்கியதாகவும், ஒரு விமானம் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
from India News https://ift.tt/SvT3RnF
0 Comments