அதிமுக மாநாடு; கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!
அடுத்த மாதம் (ஆகஸ்ட் 20-ம் தேதி) மதுரையில் அ.தி.மு.க மாநாடு நடைபெறவிருக்கிறது. அதற்கான முன்னேற்பாடுகளை அந்தக் கட்சியினர் மிகத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 5-ம் தேதி சென்னையில் அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. அதில், கட்சியின் வளர்ச்சிப் பணிகள், உறுப்பினர் சேர்க்கை, நாடாளுமன்றத் தேர்தல் முன்னேற்பாடுகள், பூத் கமிட்டி பணிகள் தொடர்பாக விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், இன்று காலை 10 மணிக்கு அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மதுரையில் நடைபெறவிருக்கும் மாநாட்டின் நிகழ்ச்சிக் குழுவினருடன் ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார். இந்தக் கூட்டத்தில் மதுரை மாநாட்டில் நிறைவேற்றப்படவேண்டிய தீர்மானங்கள், மாநாடு ஏற்பாடுகள் குறித்து எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை மேற்கொள்ளவிருப்பதாகக் கூறப்படுகிறது.
from India News https://ift.tt/48JPH0g
0 Comments