வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த சுடுமண் பொம்மை முதல் உலக மக்கள் தொகை தினம் வரை | News in Photos

சென்னை எழும்பூர்; சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக் கோனின் பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
கன்னியாகுமரி: பேச்சிப்பாறை அணையிலிருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மயிலாடி உதவி பொறியாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
நீலகிரி: ஊட்டி அரசுத் தாவரவியல் பூங்காவில் உள்ள மரங்கள் மற்றும் தாவரங்களின் விவரங்களை சுற்றுலா பயணிகள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் 'க்யூ ஆர் கோடு' விசை துலங்கியை அந்தந்த தாவரங்கள் மற்றும் மரங்களில் பூங்கா நிர்வாகம் பொருத்தி வருகிறது.
ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர் சந்திப்பு
மயிலாடுதுறை; கூட்டுறவு துறையின் சார்பில் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை வளாகத்தில், குறைந்த விலையில் பொதுமக்களுக்கு தக்காளி ,வெங்காயம் விற்பனை
சென்னை எழும்பூர்: சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக் கோனின் குருபூஜை நிகழ்வில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை மரியாதை செலுத்தினார்.
சென்னை எழும்பூர்: சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக் கோனின் குருபூஜை நிகழ்வில் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார்.
சென்னை எழும்பூர்: சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் குருபூஜை நிகழ்வில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மரியாதை செலுத்தினார்.
கோவை: பள்ளிக் கல்வித்துறை சார்பில் நம்ம ஊரு பள்ளி திட்டத்தின் நிகழ்ச்சியில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் அவர்களது பங்களிப்புகளை வழங்கினர். இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டார்
புதுச்சேரி: சீனாவில் நடைப்பெறும் 19 வது ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்காக ரோலர் ஸ்கேட்டிங் பிரிவில் பங்கேற்கும் புதுச்சேரி மாணவி மெர்லினை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பாராட்டினார்
தேனி: உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு அரசு மருத்துவமனை செவிலியர்கள் கலந்து கொண்ட மாபெரும் விழிப்புணர்வு பேரணி
விருதுநகர்: உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு மாவட்டத்தின் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் செவிலியர்கள் கலந்து கொண்ட மாபெரும் விழிப்புணர்வு பேரணி
தஞ்சை: உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
ஈரோடு: மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா அவர்கள் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் சுய உதவிக் குழுவில், தொழில் செய்யும் பயனாளிகளுக்கு ரூ.11.00 இலட்சத்திற்கான நுண் நிதி நிறுவன கடனுதவியினை வழங்கினார்
புதுச்சேரி: உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்சியில் முன்கள பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இராமநாதபுரம்: கொட்டும் மழையில் சத்துணவு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வேலூர்: உலக மக்கள் தொகை தினம் குறித்த விழிப்புணர்வு பேரணி
விழுப்புரம்: வள்ளலார் கோவில் போலீஸ் பாதுகாப்பு உதவியுடன் கையகப்படுத்தப்பட்டு, இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டுவரப்பட்டது.
வேலூர்: காட்பாடி தாலுகா 55 புதூர் கிராம முருகன் கோயிலை இந்து சமய அறநிலைத்துறை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், மக்கள் தொகையினை கட்டுப்படுத்துவது தொடர்பாக, விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் சி.பழனி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
விருதுநகர்: வெம்பக்கோட்டை அகழாய்வில் ஆண் உருவ சுடு மண் பொம்மை கண்டெடுக்கப்பட்டது.
மதுரை: புதிய தமிழகம் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி குடிபோதையில் இருந்து தமிழகத்தை காப்போம் என்ற புத்தகத்தை வெளியிட்டார்.
மதுரை: தெற்கு மண்டல அலுவலகத்தில் மேயர் இந்திராணி மற்றும் மாநகராட்சி ஆணையர் தலைமையில் பொதுமக்கள் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி: கடற்கரை பகுதியில் மாலை நேரத்தில் காணப்பட்ட கருமேக கூட்டம்.
விருதுநகர்: உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது.
நாகர்கோவில் ; மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் மஞ்சப்பை வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி: மீளவிட்டான் இரட்டை ரயில் பாதை பணிகளை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அனந்த் மதுகர் சௌத்ரி தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகைத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி; வீரன் அழகுமுத்துகோன் குருபூஜை நிகழ்வில் பாளையங்கோட்டை யில் அமைந்துள்ள வெண்கல சிலைக்கு சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப் மாலை அணிவித்து மரியாதை செய்தார்
திருநெல்வேலி ; இந்தியா சிமெண்டஸ் மைதானத்தில் நடைபெற உள்ள TNPL இறுதி போட்டியில் கலைநிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை நடைபெற்றது.
திருநெல்வேலி; TNPL - 2023 இறுதி போட்டியில் லைக்கா கோவை கிங்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணியின் கேப்டன்கள் கோப்பையுடன்.
திருநெல்வேலி: உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவிகள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டு குடும்ப கருத்தடை பற்றிய விழிப்புணர்வு உறுதி மொழியினை சார் ஆட்சியர் கோகுல் தலைமையில் எடுத்து கொண்டனர்


from India News https://ift.tt/gGwFJIB

Post a Comment

0 Comments