இந்தியாவில் கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் கடந்த ஒரு மாதமாகவே தக்காளி கிலோ ரூ.100-லிருந்து ரூ.150, ரூ. 200 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சாதாரண மக்களை இன்னலுக்குள்ளாக்கும் தக்காளி விலையுயர்வுக்கு முக்கிய காரணிகளாகப் பல மாநிலங்களில் பெய்துவரும் கனமழை, வரத்து குறைவு உள்ளிட்டவை கூறப்படுகிறது.
அதேசமயம் இன்னொருபக்கம் பல கடைகளில் மக்கள் விலையுயர்ந்த பொருள்கள் வாங்கும்போது கடை முதலாளிகள் அவர்களுக்குத் தக்காளியை இலவசமாக வழங்கி கவனம் ஈர்க்கும் செயல்களில் ஈடுபடுகின்றனர். அந்த வரிசையில் தெலங்கானாவின் ஆளுங்கட்சியான பி.ஆர்.எஸ்ஸை-ச் சேர்ந்த ராஜனாலா ஸ்ரீஹரி என்பவர், அமைச்சர் கே.டி.ராமராவின் பிறந்தநாளான நேற்று (ஜூலை 24) மக்களுக்கு இலவசமாகத் தக்காளி வழங்கி பேசுபொருக்குள்ளாகியிருக்கிறார்.
முன்னதாக ராஜனாலா ஸ்ரீஹரி, கடந்த ஆண்டு அக்டோபரில் தெலங்கானா ராஷ்டிர சமிதி என்று இறந்த கட்சியின் பெயர் பாரத ராஷ்டிர சமிதி எனப் பெயர்மாற்றம் செய்யப்படும்போது இலவசமாக மது பாட்டில் மற்றும் உயிருள்ளக் கோழியை மக்களுக்கு இலவசமாக வழங்கி வைரலானார். இந்த நிலையில், நேற்றைய தினம் அமைச்சர் கே.டி.ராமராவின் பிறந்தநாளைக் கொண்டாடிய ராஜனாலா ஸ்ரீஹரி, இரண்டு கிலோ தக்காளியை இலவசமாக வழங்கினார். மக்களும், பி.ஆர்.எஸ் கட்சியின் வண்ணமான பிங்க் நிறத்தில் கூடைகளில் தக்காளியை வாங்கிச் சென்றனர்.
பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜனாலா ஸ்ரீஹரி, ``வருங்கால முதல்வர் கே.டி.ராமராவின் 47-வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில், ஒருவருக்கு தலா 2 கிலோ தக்காளி என 200 கிலோ தக்காளியை இலவசமாக வழங்கினோம். பொதுமக்கள் எந்த நேரத்திலும் கஷ்டப்படக் கூடாது எனும் முதல்வர் சந்திரசேகர் ராவ், கே.டி.ராமராவின் விருப்பப்படி இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது" என்று கூறினார்.
from India News https://ift.tt/3jN1A4q
0 Comments