சரத் பவார் மனைவியை நேரில் நலம் விசாரித்த அஜித் பவார்! - பின், வந்தே பாரத் ரயில் மூலம் ஷீரடி பயணம்

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவை ஏற்படுத்திக்கொண்டு பா.ஜ.க. கூட்டணி அரசில் சேர்ந்துள்ள அஜித் பவாருக்கு அவர் கேட்ட நிதித்துறையை பா.ஜ.க ஒதுக்கி இருக்கிறது. அஜித் பவாருடன் வந்த 8 அமைச்சர்களுக்கும் அவர்களின் விருப்பமான இலாகாகள் கொடுக்கப்பட்டுள்ளது. வரும் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டுதான் இவை அனைத்தையும் பா.ஜ.க செய்து கொண்டிருக்கிறது. பா.ஜ.க அமைச்சர்கள் தான் அதிக அளவு இலாகாக்களை தேசியவாத காங்கிரஸ் அமைச்சர்களுக்கு விட்டுக்கொடுத்துள்ளனர்.

நிதித்துறை கிடைத்த பிறகு அஜித் பவார் தனது சித்தப்பா சரத் பவாரின் வீடு இருக்கும் சில்வர் ஒக் கட்டடத்திற்கு சென்றார். அங்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு கையில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட தனது சித்தி பிரதிபா பவாரை சந்தித்து உடல் நலம் விசாரித்தார். பின்னர் இன்று காலையில் வந்தே பாரத் ரயில் மூலம் ஷீரடிக்கு புறப்பட்டு சென்றார். ரயில் தானே வந்த போது அவரது கட்சி தொண்டர்கள் அஜித் பவாருக்கு வரவேற்பு கொடுத்தனர்.

முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயின் கோட்டையாக தானே கருதப்படுகிறது. அதோடு தானே தேசியவாத காங்கிரஸ் கட்சியில் முக்கிய தலைவராக இருக்கும் ஜிதேந்திர அவாட் தற்போது சரத் பவார் அணியில் இருக்கிறார். எனவே அஜித் பவார் தனது செல்வாக்கை நிரூபிக்க கட்சி தொண்டர்கள் மூலம் ரயில் நிலையில் வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்துள்ளார். அஜித் பவார் ஷீரடி சென்றடைந்தவுடன் அவருக்கு கட்சி தொண்டர்கள் வரவேற்பு கொடுத்தனர். அதனை தொடர்ந்து சாய்பாபா கோயிலுக்கு சென்றார்.

அவருக்கு கோயில் நிர்வாகிகள் வரவேற்பளித்தனர். சாய்பாபாவை அஜித் பவார் சிறப்பு தரிசனம் செய்தார். இன்று சனிக்கிழமை என்பதால் கோயிலில் அதிக கூட்டம் இருந்தது. புனே மற்றும் சோலாப்பூரில் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு நல்ல செல்வாக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.



from India News https://ift.tt/ZH1mkia

Post a Comment

0 Comments