`ஆளுநர் பேசும் சில அரசியல் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது’ - செல்லூர் ராஜூ
மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ, ``ஆளுநர் ஒரு கட்சியின் மாநில பிரதிநிதி போல பேசி வருகிறார். அவராக பேசுகிறாரா அல்லது அவரை யாரும் அறிக்கை அனுப்பி பேச சொல்கின்றனரா என தெரியவில்லை. அவர் பேசும் சில அரசியல் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது. அதேநேரம் ஆளுநரை ஆளும்கட்சி விமர்சனம் செய்வதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆளும்கட்சி - ஆளுநர் மோதல் காரணமாக தமிழக மக்கள் நல திட்டங்களுக்கு தான் பாதிப்பு ஏற்படும்’ என்றார். ஆளுநர் கருத்துகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பெரிதாக கருத்து சொல்லாமல் இருந்து வந்த நிலையில், முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ தனக்கே உரிய முறையில் பதில் அளித்திருக்கிறார்,
சென்னை: தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கிய ரயில் சக்கரங்கள்!
சென்னை, பேசின் பிரிட்ஜ் பகுதியில் ரயில் பணிமனை ஒன்று உள்ளது. அதன் அருகே ஜனா சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் 2 சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று நள்ளிரவு 12 மணியளவில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு பணிமனைக்கு ரயில் சென்ற போது இந்த சம்பவம் நடந்தது. சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, ரயில்வே ஊழியர்கள் உதவியுடன் 2 சக்கரங்களும் பழைய நிலைக்கு கொண்டுவரப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே அதிகாரிகளிடம் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
from India News https://ift.tt/EBI29HT
0 Comments