2015 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் அச்சிடப்பட்ட 500 ரூபாய் நோட்டுகளில், சுமார் 88,000 கோடி மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகள் காணாமல்போனதாகச் செய்திகள் உலவிய நிலையில், ரிசர்வ் வாங்கி அதற்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
முன்னதாக மனோரஞ்சன் ராய் என்ற செயற்பாட்டாளர் கேட்ட ஆர்.டி.ஐ தகவல் மூலம் வெளியான அறிக்கையின்படி, 2015 ஏப்ரல் முதல் 2016 டிசம்பர் வரையில் ரூபாய் நோட்டு அச்சகத்தில் 8,810.65 மில்லியன் 500 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டதாகவும், அதில் 7,260 மில்லியன் 500 ரூபாய் நோட்டுகள் மட்டுமே ரிசர்வ் வங்கிக்கு கிடைத்ததாகவும் சொல்லப்பட்டது.
மொத்தமாகக் கணக்கில் வராமல், காணாமல்போனதாகக் கூறப்படும் 500 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 88,032.5 கோடி ஆகும். இதுமட்டுமல்லாமல் செயற்பாட்டாளர் மனோரஞ்சன், மத்திய பொருளாதார புலனாய்வுப் பணியகம் (CEIB), அமலாக்க இயக்குநரகம் ஆகியவற்றுக்கு இதுபற்றி தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில், ரூபாய் நோட்டுகள் காணாமல்போனதாக வெளியான தகவல்கள் தவறானவை என ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.
இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், `அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் காணாமல்போனதாக வெளிவரும் செய்திகள் சரியானவை அல்ல. ரூபாய் நோட்டு அச்சகத்திலிருந்து ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்படும் அனைத்து ரூபாய் நோட்டுகளும் சரியாகக் கணக்கில் வைக்கப்பட்டிருக்கின்றன. எனவே, இதுபோன்ற விஷயங்களில் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட தகவல்களை நம்பியிருக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்படுகிறது' என்று கூறப்பட்டிருக்கிறது.
from India News https://ift.tt/smGd2W8
0 Comments