இந்தியாவில் பிரதான அரசியல் கட்சிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் பா.ஜ.க-வும், காங்கிரஸும் இருக்கின்றன. இந்த இரண்டு கட்சிகளுக்கு அடுத்தபடியாக தேசிய அளவில் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி இருக்கிறது. அந்தக் கட்சி டெல்லி, பஞ்சாப் என இரண்டு மாநிலங்களில் ஆட்சி செய்து வருகிறது. அண்மையில்தான் அந்தக் கட்சி தேசியக்கட்சியாக அங்கீகாரம் பெற்றது. ஆம் ஆத்மி தன்னுடைய ஆட்சி எல்லையை விரிவுபடுத்த மிகவும் மெனக்கெடல் செய்து வருகிறது. எந்தந்த மாநிலங்களில் பாஜக-காங்கிரஸ் காட்சிகள் மோதிக்கொள்கின்றனவோ, அங்கெல்லாம் களத்திலிறங்கி, தன்னுடைய இருப்பைக் காட்ட முயன்று வருகிறது.
இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் காங்கிரஸ் கட்சிக்கு சமாதான உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரும் டெல்லி அமைச்சருமான சவுரப் பரத்வாஜ் செய்தியாளர் சந்திப்பின்போது, ``2024-ல் மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்றால் நாடு முடியாட்சின்கீழ் செல்லும் நிலை ஏற்படும்.
அரசியலமைப்புச் சட்டத்தையே மாற்றி, தான் உயிருடன் இருக்கும் வரை நாட்டின் ராஜாவாகவே தன்னை அறிவிக்கக் கூடும். சி.பி.ஐ, அமலாக்கத்துறை, ஐ.டி போன்றவற்றை, சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் எதிர்க்கட்சிகளை அடைத்து வைக்க பா.ஜ.க எப்படியெல்லாம் ஆட்டி வைக்கிறது என்பதை கண்டுவருகிறோம்.
காங்கிரஸ் கட்சி 2015-2020 டெல்லி சட்டசபைத் தேர்தல்களில் ஓர் இடத்தைக்கூட பிடிக்கவில்லை. எனவே `டெல்லி, பஞ்சாப் மாநிலங்களில் நாங்கள் போட்டியிடமாட்டோம்' என்று காங்கிரஸ் கட்சி கூறினால், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் நாங்கள் தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்று அறிவிப்போம்" என்று கூறினார்.
from India News https://ift.tt/uvgSalR
0 Comments