மததய அமசசரவயல வரவல பரய மறறம... 12 பர நகக மட - அமத ஷ மடவ?!

மக்களவைக்கு வரும் மே மாதம் தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்கு வேண்டிய ஏற்பாடுகளை பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இணைந்து செய்ய ஆரம்பித்துள்ளனர் என்கிறது டெல்லி வட்டாரங்கள். எதிர்க்கட்சி தலைவர்கள் கூடி முக்கிய ஆலோசனை நடத்தி இருக்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா உட்பட வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பியவுடன் கட்சியின் மூத்த தலைவர்களை அழைத்து முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கூட்டம் நான்கு மணி நேரத்திற்கும் மேல் நடந்தது.

பிரதமர் மோடி-அமித் ஷா

இந்த ஆலோசனைக்கூட்டத்தில் சரியாக செயல்படாத அமைச்சர்கள் சிலரை நீக்குவது குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்பட்டதாக பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவித்தன. மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக நவம்பர் மாதத்தில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலங்கானா, மிசோரம், சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தலும் வர இருக்கிறது. இத்தேர்தலை எதிர்கொள்ள அம்மாநில பா.ஜ.க.தலைவர்களுக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்க கட்சித் தலைமை முடிவு செய்துள்ளது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

மத்திய அமைச்சரவை மாற்றியமைப்பு ஜூலை இரண்டாவது வாரத்தில் இருக்கும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அமைச்சரவை மாற்றியமைக்கும் போது சரியாக செயல்படாத 12 அமைச்சர்களை பதவியில் இருந்து நீக்க பிரதமர் மோடியும், அமித் ஷாவும் முடிவு செய்துள்ளனர் என்கிறார்கள். அவர்களுக்கு பதில் சட்டமன்ற தேர்தல் நடக்கும் மாநிலங்களை சேர்ந்தவர்களை அமைச்சர்களாக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் மகாராஷ்டிராவில் சிவசேனாவை சேர்ந்த இரண்டு பேருக்கு அமைச்சர் பதவி கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.

ஆர்.எஸ்.எஸ் - பாஜக

முன்னதாக பா.ஜ.க தலைவர்களுடன் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில், எந்த அமைச்சர்களை நீக்கலாம் என்று விவாதித்துள்ளனர். வரும் 6, 7, 8ம் தேதி கூடி மீண்டும் முக்கிய ஆலோசனை நடத்த பா.ஜ.க. தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் சில மத்திய அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்பட இருக்கின்றனர் என்றும் கர்நாடகா, பஞ்சாப், தெலங்கானா, ஹரியானா மாநிலங்களில் தலா ஒரு அமைச்சரை பதவி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளனர் என்றும் பேசப்படுகிறது.

இது குறித்து பெயர் சொல்ல விரும்பாத பா.ஜ.க.தலைவர் ஒருவர் கூறுகையில், `கட்சியின் முக்கிய தலைவர்கள் கூட்டத்தில் அமைச்சரவையில் மாற்றம் செய்வது மட்டுமல்லாமல் கட்சியின் செயலாளர்கள் 3 அல்லது நான்கு பேரை நீக்குவது குறித்தும், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு தேர்தல் பொறுப்பாளர்களாக யாரை நியமிப்பது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது’ என்றார்.

பீகாரில் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வான் தொடர்ந்து பா.ஜ.க.விற்கு விசுவாசமாக இருக்கிறார். எனவே அவருக்கும் மத்திய அமைச்சரவையில் வாய்ப்பு கொடுக்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளாராம் . ராஜஸ்தானில் ஜெய்ப்பூர் ராஜகுடும்பத்தை சேர்ந்த தியா குமாரியையும், தெலங்கானா பா.ஜ.க.தலைவர் சஞ்சய் பண்டி மற்றும் சத்தீஷ்கரை சேர்ந்த ஒருவரை மத்திய அமைச்சராக்குவது குறித்தும் பா.ஜ.க.வில் ஆலோசனை நடைபெறுகிறது.

மத்திய அமைச்சரவை

தற்போது மத்திய அமைச்சராக இருக்கும் தெலங்கானாவை சேர்ந்த கிஷன் ரெட்டியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு அவரை மாநில கட்சி தலைவராக்கவும் ஆலோசனை நடைபெறுகிறது. மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் செளகான் மற்றும் மாநில கட்சி தலைவர் டி.சர்மாவின் செயல்பாடுகள் கட்சி தலைமைக்கு பிடிக்கவில்லை. எனவே அவர்களில் இரண்டு பேரில் யாராவது ஒருவர் மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. வரும் 4ம் தேதி கட்சி எம்.பி.க்கள் அனைவரும் டெல்லிக்கு வரும் படி கட்சி தலைவர் ஜெபி நட்டா அழைப்பு விடுத்துள்ளார்.

அன்றைக்கு அனைவருக்கும் இது குறித்து முறைப்படி தகவல் கொடுக்கப்பட இருக்கிறது. மக்களவைத் தேர்தலுக்காக நிர்வாக அடிப்படையில் தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு என்று மூன்று மண்டலமாக பிரித்து வேலை செய்யவும் பா.ஜ.க முடிவு செய்துள்ளது.!



from India News https://ift.tt/BltbOzN

Post a Comment

0 Comments