'5 கல இலவச அரசகக பதலக பணம' - மட அரச அதரடயக 'ஹணடல' சயத சததரமயய!

கர்நாடக மாநிலத்தில் நடந்து முடித்த தேர்தலில் காங்கிரஸ் - பா.ஜ.க இடையே கடுமையான போட்டி நிலவியது. இரண்டு கட்சிகளுக்கும் போட்டி போட்டுகொண்டு வாக்குறுதிகளை அறிவித்தன. இதில் காங்கிரஸ் வழங்கிய 5 உத்தரவாத திட்டங்கள் முக்கியமானதாக பார்க்கப்பட்டது. தேர்தல் முடிவில் 135 இடங்களில் வெற்றி பெற்று அந்த கட்சி ஆட்சியை பிடித்தது.

கர்நாடக தேர்தல்

இதையடுத்து தனது வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. இதன் ஒருபகுதியாக கடந்த 11-ந் தேதி சக்தி திட்டம் எனப்படும் அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ளும் திட்டம் தொடங்கப்பட்டது. பின்னர் அன்ன பாக்ய திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு மாதம் தலா 10 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து முதல்வர் சித்தராமையா, "அன்ன பாக்ய திட்டத்தின் கீழ் குடும்ப அட்டையில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பினருக்கும் தலா 10 கிலோ அரிசி வழங்கப்படும். இந்த திட்டம் ஜூலை 1-ம் தேதி தொடங்கப்படும்" என்றார். ஆனால் இதற்கு தேவையான அரிசியை வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டதாக சொல்லப்பட்டது. இதனால் அனைவருக்கும் தலா 10 கிலோ அரிசி வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

அரிசி

மறுபுறம் கர்நாடக பா.ஜ.க-வினர், "காங்கிரஸ் கட்சி மக்களை ஏமாற்றி விட்டது. அறிவித்தபடி வரும் 1-ம் தேதிஅனைவருக்கும் 10 கிலோ அரிசி வழங்க வேண்டும். இல்லையென்றால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்" என்றனர். இதற்கு காங்கிரஸ் கட்சியினரும் எதிர்வினையாற்றியதால், இந்த விவகாரம் பெரும் விவாதத்துக்குள்ளானது.

இதையடுத்து கர்நாடக அரசு ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு, சட்டீஷ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அரிசி கொள்முதல் செய்ய முயற்சி மேற்கொண்டது. அனால் இந்த திட்டமும் கைகொடுக்கவில்லை. பின்னர் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அரிசி நிறுவனங்களிடம் இருந்தும் கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்க திட்டமிட்டது. அதற்கு டெண்டர் விடவும் அரசு முடிவு செய்துள்ளது.

காங்கிரஸ்

இதற்கு நீண்ட நாள் எடுத்துக்கொள்ளும் என்பதால், அந்த முடிவும் கைவிடப்பட்டது. பின்னர் இதுகுறித்து விவாதிப்பதற்கான எம்.எல்.ஏ-க்களின் கூட்டம் முதல்வர் சித்தராமையா தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நடைபெற்றது. அப்போது, "வாக்குறுதியில் சொல்லப்பட்டது போல் திட்டத்தை செயல்படுத்த அரிசி கிடைக்கவில்லை.

எனவே ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களுக்கும் தலா 5 கிலோ அரிசி வழங்குவது என்றும் மீதமுள்ள தலா 5 கிலோ அரிசிக்கு பதிலாக கிலோவுக்கு ரூ.34 என்ற வீதத்தில் ரேஷன் அட்டையில் உள்ள ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் தலா ரூ.170 பணம் கொடுக்கலாம்" என முடிவு செய்யப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ் - பாஜக

பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சித்தராமையா, "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அன்ன பாக்ய திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு ஏற்கனவே வழங்கப்படும் 5 கிலோவுடன் கூடுதலாக 5 கிலோ அரிசியை சோ்த்து 10 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என்று வாக்குறுதி வழங்கினோம். இதற்காக இந்திய உணவு கழகத்திடம் மாதம் 2.29 லட்சம் டன் அரிசி வழங்க கோரினோம்.

முதலில் தயாராக இருப்பதாக அந்த நிறுவனம் கூறியது. மறுநாளே முடியாது என்று கூறிவிட்டது. நான் டெல்லிக்கு சென்றபோது உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்தேன். அப்போது, "இந்த திட்டத்தை நிறைவேற்றும் வகையால் தேவையான அளவுக்கு அரிசி வழங்க இந்திய உணவு கழக அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்" என கேட்டுக் கொண்டேன். அப்போது அவர், "அதிகாரிகளிடம் பேசுகிறேன்" என உறுதியளித்தார்.

அமித்ஷா.

மேலும் இதுகுறித்து உணவுத்துறை அமைச்சர் கே.எச்.முனியப்பா, மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார். அதற்கு அவர் அரிசி வழங்க முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். ஆனால் நாங்கள் முன்னதாக வரும் 1-ம் தேதி இந்த திட்டம் தொடங்கப்படும் என அறிவித்துவிட்டோம். ஆந்திரா, தெலங்கானா, பஞ்சாப், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களிடம் பேசியபோது, அவற்றில் சில அரிசி வழங்க சம்மதம் தெரிவித்தன.

ஆனால் விலை அதிகமாக கூறினார்கள். பொதுமக்களின் பணத்தை இஷ்டம் போல் செலவு செய்ய முடியாது. தெலங்கானா நெல் கொடுப்பதாகவும், ஆந்திரா 50 ஆயிரம் டன் அரிசி கொடுப்பதாகவும் கூறியது. இதனால் பிற மாநிலங்களில் இருந்து அரிசி கொள்முதல் செய்யும் முடிவை கைவிட்டோம். பின்னர் மத்திய அரசின் மூன்று நிறுவனங்களிடம் இருந்து அரிசி கொள்முதல் செய்ய டெண்டர் திறக்க முடிவு செய்திருக்கிறோம்.

அரிசி

ஆனால் இதற்கு ஒரு மாதம் ஆகலாம். ஆனால் நாங்கள் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், ஏழை மக்களுக்கு அதாவது 1.20 கோடி பயனாளிகளுக்கு 5 கிலோ அரிசிக்கு பதிலாக ஒரு கிலோ ரூ.34 விலையை கணக்கிட்டு பணமாக வழங்குவது என முடிவு செய்துள்ளோம். அதன்படி ரேஷன் அட்டையில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பினருக்கும் மாதம் தலா ரூ.170 கிடைக்கும்.

வரும் 1-ம் தேதி முதல் இந்த அரிசி தொகை பயனாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். அரிசி கிடைக்கும் வரை இந்த திட்டம் அமலில் இருக்கும். அரிசி கிடைத்தவுடன் பணம் கொடுப்பது நிறுத்தப்பட்டு 10 கிலோ அரிசி வழங்கப்படும். அரிசியை வைத்துக்கொண்டு அதை கொடுக்க மத்திய அரசு மறுத்துவிட்டது. இதன் மூலம் கர்நாடகத்தில் ஏழை மக்களுக்கு மத்திய பா.ஜ.க அரசு துரோகம் செய்துவிட்டது" என்றார்.

பணம்

5 கிலோ இலவச அரிசிக்கு பதிலாக பணம் கொடுப்பதாக கூறி மோடி அரசை அதிரடியாக சித்தராமய்யா ஹேண்டில் செய்திருப்பது இந்திய அரசியலில் புதிய விவாதத்தை கிளப்பியிருக்கிறது.



from India News https://ift.tt/WsKHc4F

Post a Comment

0 Comments