Tamil News Live Today: இன்று அமைச்சராக பதவியேற்கிறார் டி.ஆர்.பி.ராஜா!

டி.ஆர்.பி.ராஜா இன்று அமைச்சராக பதவியேற்கிறார்!

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்று அண்மையில் இரண்டு ஆண்டுகள் நிறைவு செய்தது. இதுவரை இரண்டு முறை சிறிய அளவில் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்ட நிலையில், மூன்றாவது முறையாக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பால்வளத்துறை அமைச்சராக இருந்த நாசர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டு, மன்னார்க்குடி எம்.எல்.ஏவான டி.ஆர்.பி ராஜா அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார்.

டி.ஆர்.பி. ராஜா

இன்று காலை 10.30 மணிக்கு கிண்டி ராஜ் பவனில் இருக்கும் அரங்கில் டி.ஆர்.பி ராஜா அமைச்சராக பதவியேற்கிறார். அவருக்கு ஆளுநர் ரவி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். அதன் பிறகு ராஜாவுக்கான இலாகா குறித்த அறிவிப்பு வெளியாகும். மேலும் சில அமைச்சர்களின் இலாக்காவில் மாற்றங்கள் இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.



from India News https://ift.tt/smdOBgn

Post a Comment

0 Comments