பயங்கரவாத அமைப்புக்கு நிதி உதவி; லண்டனில் கைதான இந்தியர், அமெரிக்காவுக்கு நாடு கடத்தல்? - யார் இவர்?

லெபனான் நாட்டில் ஹிஜ்புல்லா என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதற்கு இரான் நாட்டின் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. தங்களுடைய நாட்டின் சட்டப்படி, இந்த அமைப்பை கடந்த 2019-ம் ஆண்டு பயங்கரவாத அமைப்பாக இங்கிலாந்து அரசு அறிவித்தது.

லண்டன்

ஹிஜ்புல்லாவுக்கு நிதி ஆதரவு உள்ளிட்ட பல்வேறு விதங்களில் ஆதரவு வழங்குபவர்கள் குறித்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதற்கு சர்வதேச நாடுகளும் ஒத்துழைப்பு வழங்குகிறது. இதற்கிடையில் இந்த அமைப்பின் பயங்கரவாத செயலுக்கு நிதி வழங்கும் செயலில் சிலர் ஈடுபட்டு வருவது குறித்த தகவல் லண்டன் போலீஸாருக்கு கிடைத்தது.

இதையடுத்து இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த போலீஸாருடன் இணைந்து, தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் லண்டன் பெருநகர போலீஸாரால் நசீம் சையது அகமது என்பவர் கைதுசெய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை நடத்தப்பட்டது.

அமெரிக்கா

அதனடிப்படையில் மேற்கு லண்டன் நகரில் காசி விஸ்வநாதன் நாகா என்ற நாகராஜன் சுந்தர் பூங்குளம் என்பவரையும் போலிஸார் கைதுசெய்தனர். இவர் தமிழகத்தின், மதுரையில் பிறந்தவர். அமெரிக்க காவல்துறை அதிகாரிகள் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில், இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

இந்த வழக்கை விசாரித்து வரும் அமெரிக்கா காவல்துறை அதிகாரி ஒருவர், "கடந்த 1957-ம் ஆண்டு சரஸ்வதி நாகராஜன், பூங்குளம் காசி விஸ்வநாதன் நாகராஜன் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். மதுரையில் இருந்து சென்னைக்கு குடிபெயர்ந்த அவர், தன்னுடைய தொழிலுக்குத் தேவையானத் தகுதிகளை வளர்த்து கொண்டதாக தெரிகிறது.

பயங்கரவாதம்

பின்னர் 1999-ம் ஆண்டில் கென்யாவுக்கு சென்று அங்கிருந்து ஆப்பிரிக்கா முழுவதும் பரவலாகப் பயணம் செய்திருக்கிறார். லெபனான் நாட்டில் நிரந்தர குடியுரிமை பெற்றிருக்கிறார். இவ்வாறு சென்றதற்கான காரணம் தெளிவாக இல்லை. 2009-ம் ஆண்டு பெல்ஜியம் சென்றிருக்கிறார்.

அங்கு ஆண்ட்வெர்ப் பகுதியில் நிரந்தர குடியுரிமை பெற்றிருக்கிறார். அப்போது அதேபகுதியில் குடியேறிய ஒரு தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த ராதா என்பவரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது சுந்தருக்கும், அவரின் குடும்பத்தினருக்கும் இடையில் கருத்து வேறுபாட்டை உருவாகியிருக்கிறது. இதையடுத்து அவரின் சகோதரிகள் உறவை முறித்துக்கொண்டிருக்கிறார்கள்.

லண்டன்

சுந்தர் நாகராஜனுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். ​1993-ம் ஆண்டு பிறந்த இளைய மகன் சித்தார்த், கல்லூரியில் படித்து வருகிறார். 1988-ம் ஆண்டு பிறந்த மூத்த மகன் பரத் சுந்தர், ஒரு ஆட்டோமொபைல் நிறுவனத்தில் பொறியாளராக இருக்கிறார். பரத் சுந்தரின் மனைவி டீனா ஜெயக்குமார், சென்னையைச் சேர்ந்த பட்டதாரி ஆவார். இருவரும் அமெரிக்காவில் இருக்கும் இந்தியானா பகுதியில் பணியாற்றி வருகிறார்கள்" என்றார்.

இது குறித்து லண்டன் போலீஸ் வட்டாரங்கள், "ஹிஜ்புல்லா என்ற பயங்கரவாத அமைப்பு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக சுந்தர் நாகராஜன் சர்வதேச கைது வாரண்டின் கீழ் கைதுசெய்யப்பட்டிருக்கிறது. அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட இருக்கிறார்.

முன்னதாக கைதுசெய்யப்பட்ட நசீம் சையது அகமது, கலை பொருள் சேகரிப்பாளராகவும், வைர வியாபார டீலராகவும் செயல்பட்டு வருகிறார். அவரிடம் கணக்காளராகப் பணியாற்றிவந்திருக்கிறார் சுந்தர். இவரின் தலைமையிலான குழு ஹாங்காங், தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. இவர்கள் ஹிஜ்புல்லா என்ற பயங்கரவாத அமைப்புக்கு நிதி உதவி செய்து வருகிறார்கள். அதற்கான மத்திய மேலாளராக நாகராஜன் இருந்து வருகிறார்" என்றனர்.



from India News https://ift.tt/ePjS7LD

Post a Comment

0 Comments