Tamil News Live Today: 228 வனத்துறை பணியாளர்கள், 50 தன்னார்வலர்கள்... முதுமலையில் யானைகள் கணக்கெடுப்பு தொடங்கியது!

முதுமலையில் யானைகள் கணக்கெடுப்பு துவங்கியது!

முதுமலை புலிகள் காப்பகத்தில் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு இன்று காலை துவங்கியது. 228 வனத்துறை பணியாளர்கள், 50 தன்னார்வலர்கள் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து மூன்று நாட்களுக்கு இந்த கணக்கெடுப்பு நடைபெற இருக்கிறது.

தொடரும் கள்ளச்சாராய வேட்டை!

கள்ளச்சாராயம்

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ள சாராயத்தினால் ஏற்பட்ட உயிரிழப்பு 20-ஐ தாண்டி உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் கள்ளச்சாராயம் தடுப்பு நடவடிக்கை வேகமெடுத்துள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே மணிவிழுந்தான் காலனி பகுதியில் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 1000 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சாராயத்தை மண்ணில் புதைத்து வைத்திருந்ததாக மனோகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் என மொத்தம் ஆறு பேரை போலீஸார் தேடி வருகின்றனர். அதேபோன்று திருவாரூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவு பேரில் நடத்தப்பட்ட சட்டவிரோத மது விற்பனை தடுப்பு சோதனையில், சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 145 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். மொத்தம் 143 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. மேலும் கள்ளத்தனமாக சாராயம் தயாரித்த இரண்டு நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரை செய்துள்ளார்.



from India News https://ift.tt/2cyjVik

Post a Comment

0 Comments