``நாங்கள் இப்படிப்பட்ட நாள்களைப் பார்க்கவா பதக்கங்களை வென்றோம்!'' - மல்யுத்த வீராங்கனை வேதனை

தேசிய தலைநகர் டெல்லியில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து, மல்யுத்த வீராங்கனைகள் நடத்திவரும் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவருகிறது. இருப்பினும் பிரிஜ் பூஷன் சரண் சிங், தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை என்றும், பிரதமர் மோடியோ பா.ஜ.க-வோ கூறினால் பதவியை ராஜினாமா செய்வேன் என்றும் கூறிவருகிறார்.

பிரிஜ் பூஷன் சரண் சிங் - பாஜக

அதேசமயம் சிறுமி உட்பட மல்யுத்த வீராங்கனைகள் குற்றச்சாட்டின் அடிப்படையில், பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது போக்சோ சட்டத்தின் கீழ் டெல்லி போலீஸார் வழக்கு பதிவுசெய்திருக்கிறது. இந்த நிலையில், ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திவரும் மல்யுத்த வீராங்கனைகள், வீரர்கள் மீது போலீஸார் நேற்று தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

முன்னதாக நேற்றிரவு மழையால் மல்யுத்த வீரர் வீராங்கனைகளின் படுக்கைகள் நனைந்ததால், வேறு படுக்கைகளை அவர்கள் கொண்டுவர போலீஸார் அனுமதி மறுத்ததாகக் கூறப்படுகிறது. அப்போது குடிபோதையில் ஒரு போலீஸ் அதிகாரி, இரண்டு மல்யுத்த வீரர்களைத் தாக்கியதாகவும், சக போலீஸ் அதிகாரிகள் அதைக் கண்டும் அமைதியாக நின்றனர் என்றும் வினேஷ் போகட் குற்றம் சாட்டினர்.

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட்

இது குறித்து வேதனையாகப் பேசிய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட், ``அவர்கள் எங்களிடம் இப்படி நடந்துகொள்வதற்கு நாங்கள் என்ன குற்றவாளிகளா... போலீஸ்காரர்களால் நான் துன்புறுத்தப்பட்டுத் தள்ளப்பட்டேன். பெண் போலீஸார்கள் எல்லாம் எங்கேப் போனார்கள்... நாங்கள் இப்படிப்பட்ட நாள்களைப் பார்க்கவா பதக்கங்களை வென்றோம்..." எனக் கண்ணீர் விட்டார். அதோடு, உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் நான்கு பதக்கங்களை வென்ற பஜ்ரங் புனியா, ``என்னுடைய பதக்கங்கள் அனைத்தையும் திரும்பப்பெறுமாறு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்" என ஆதங்கப்பட்டார்.



from India News https://ift.tt/2x9oXvw

Post a Comment

0 Comments