தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், தி.மு.க-வின் தலைவருமான கருணாநிதி இருக்கும்போதே, தி.மு.க-விலிருந்து பிரிந்து ம.தி.மு.க என்ற புதிய கட்சியைத் தொடங்கி தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலையை உருவாக்கியவர் வைகோ. ஆனால், தற்போது வைகோ தொடர் தேர்தல் இழப்புகள் காரணமாக, ஆளும் தி.மு.க கூட்டணிக் கட்சிகளில் ஒருவராக அங்கம் வகிக்கிறார்.
இந்த நிலையில் ம.தி.மு.க அவைத்தலைவர் சு.துரைசாமி, ``30 ஆண்டுக்காலமாக உங்கள் உணர்ச்சிமயமான பேச்சை நம்பி வாழ்க்கையை இழந்த தொண்டர்களை இனியும் ஏமாற்றாதீர்கள். ம.தி.மு.க-வுக்கு எதிர்காலம் இல்லை. தாய்க் கழகமான தி.மு.க-வுடன் இணைப்பதே நல்லது" என வைகோவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்த விவகாரம் அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாகவே, இது குறித்து விகடன் வலைதளப் பக்கத்தில் வாசகர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
அதில், `ம.தி.மு.க-வுக்கு எதிர்காலம் இல்லை. தி.மு.க-வுடன் இணைத்துவிடுவதே நல்லது என ம.தி.மு.க அவைத்தலைவர் சு.துரைசாமி பேசியிருப்பது...' எனக் கேள்வி கொடுக்கப்பட்டு, `அதிருப்தியின் வெளிப்பாடு, சரியான கருத்து, கருத்து இல்லை' என்ற மூன்று விருப்பங்களும் தரப்பட்டிருந்தன.
இந்த நிலையில், கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி அதிகபட்சமாக 72 சதவிகிதம் பேர் `சு.துரைசாமி பேசியிருப்பது சரியான கருத்து' எனத் தெரிவித்திருக்கின்றனர். அதற்கடுத்தபடியாக, `25 சதவிகிதம் பேர் அதிருப்தியின் வெளிப்பாடு' என்றும், `3 சதவிகிதம் பேர் கருத்து இல்லை' என்றும் தெரிவித்திருக்கின்றனர்.
from India News https://ift.tt/8wE3ouL
0 Comments