``இதைச் செய்தால் தான் பாஜக-வை வீழ்த்த முடியும்" - எதிர்க்கட்சிகளுக்கு சச்சின் பைலட் கூறுவதென்ன?!

மத்தியில் ஆளும் பா.ஜ.க தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டிவருகின்றன. ஒருபக்கம் சில எதிர்க்கட்சிகள் பா.ஜ.க-வுக்கு எதிராக காங்கிரஸ் அல்லாத மூன்றாவது கூட்டணியை உருவாக்குவதற்கான வேலைகளைச் செய்துவருகின்றன.

பாஜக

இன்னொரு பக்கம் நிதிஷ்குமார் போன்றோர் காங்கிரஸையும் சேர்த்து மொத்த எதிர்க்கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துவருகிறார். ஒருவழியாக காங்கிரஸும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகளுடன் ஒன்றிணையத் தயார் எனக் கூறிவருகிறது. ஆனால் இப்படிக் கூறும் காங்கிரஸுக்குள்ளே ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் உள்கட்சி மோதல்கள் அரங்கேறி வருகிறது.

ராஜஸ்தானில் இந்தாண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் ஆளும் காங்கிரஸில் வெளிப்படையாகவே மோதல்கள் அரங்கேறுவதால் தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் பா.ஜ.க-வை தேசிய அளவில் தோற்கடிக்க எதிர்க்கட்சிகளுக்கு சச்சின் பைலட் அறிவுரை வழங்கியிருக்கிறார்.

சச்சின் பைலட்

ராஜஸ்தானில் நேற்று நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட சச்சின் பைலட், ``வெவ்வேறு மாநிலங்களில் பா.ஜ.க-வை தோற்கடிப்பது மிக அவசியம். பா.ஜ.க-வை மாநிலங்களில் தோற்கடித்தால்தான் தேசிய அளவில் தோற்கடிக்க முடியும். எனவே தான் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்" என எதிர்க்கட்சிகள் ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்தார்.



from India News https://ift.tt/YFTSpn0

Post a Comment

0 Comments