இந்திய மற்றும் இஸ்ரேலிய அரசாங்கங்களின் கூட்டு முயற்சியின் விளைவாக, சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழக வளாகத்தில் `இந்தியா-இஸ்ரேல் நீர் தொழில்நுட்ப மையம்' (CoWT) அமைக்கப்படவுள்ளது.
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் இந்தப் புதிய வசதியை நிறுவுவதற்கு இஸ்ரேலின் சர்வதேச வளர்ச்சி ஒத்துழைப்புக்கான ஏஜென்சியான MASHAV உடன் இணைந்து செயல்படவுள்ளது. இந்த மையத்தின் முக்கிய நோக்கம், இந்தியத் தேவைகளுக்காக இஸ்ரேலின் சிறந்த தொழில்நுட்பங்களை செயல்படுத்துவதை உறுதி செய்வதும், இந்திய நீர்த் துறைக்கான நிலையான மேலாண்மை தீர்வுகளில் பணியாற்றுவதும் ஆகும்.
இந்த மாத தொடக்கத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் மற்றும் இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் ஏலி கோஹன் ஆகியோர் முன்னிலையில், இது தொடர்பான விருப்பக் கடிதத்தில் இந்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் (MoHUA) செயலர் மனோஜ் ஜோஷி, ஐஐடி மெட்ராஸின் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோட்டி மற்றும் இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நவோர் கிலோன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இது தொடர்பாக பேசிய ஐ.ஐ.டி மெட்ராஸின் வேதியியல் துறை பேராசிரியர் டி.பிரதீப், ``இந்தியாவின் நீர் பாதுகாப்பு மேம்பட்ட மற்றும் மலிவு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நீர் வளங்களைத் திறமையாக நிர்வகிப்பதில் அடங்கியுள்ளது. அம்ருத் (புத்துணர்ச்சி மற்றும் நகர்ப்புற மாற்றத்துக்கான அடல் மிஷன்) இயக்கத்தின் வழிகாட்டுதலின் கீழ், இந்தத் தொழில் நுட்பத்தில் முன்னணியில் இருக்கும் இஸ்ரேலிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.
ஒருங்கிணைந்த நீர்வள மேலாண்மை, நகர்ப்புற நீர் வழங்கல் மற்றும் வருவாய் அல்லாத நீர், நீர் மற்றும் கழிவுநீர் மறுசுழற்சி, ஸ்மார்ட் தரவு மேலாண்மை மற்றும் AI தொடர்பான குறிப்பிட்ட திட்டங்களை இரண்டு அரசாங்கங்களும் கூட்டாக ஆராய்ச்சி செய்ய திட்டமிட்டுள்ளன” என அவர் கூறியுள்ளார்.
from India News https://ift.tt/d74SJ6P
0 Comments