சட்டப்பிரிவு 370 ரத்து முதல் 2021 வரை... ஜம்மு காஷ்மீர் பாதுகாப்புக்கு ரூ.9,120 கோடி! - மத்திய அரசு

தீவிரவாதிகளின் ஊடுருவல்களைத் தடுக்கும் விதமாகவும், நாட்டின் எல்லை பாதுகாப்புக்காகவும் ஜம்மு காஷ்மீரில் உச்சபட்ச ராணுவ பாதுகாப்பு எப்போதும் இயக்கித்திலேயே இருக்கும். அவ்வப்போது தீவிரவாதிகளுடன் நடைபெறும் எல்லைத் தாக்குதல்களில், இரு தரப்பிலும் உயிரிழப்புகளும் நிகழும். இப்படி எப்போதும் ஒரு பதட்ட நிலையிலேயே இருக்கும் காரணத்தினாலே, மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட இந்திய ராணுவம் அதிகளவில் அங்கு செயல்படுகிறது. இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரின் மாநில சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதுக்குப் பிறகு, மாநிலத்தின் பாதுகாப்பு திட்டங்களுக்காக, காஷ்மீர் அரசுக்கு ரூ.9,120.69 கோடியை மத்திய அரசு செலவிட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கென்று இந்திய அரசால் அளிக்கப்பட்டிருந்த மாநில சிறப்பு அந்தஸ்து உரிமையை(இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 370 மற்றும் பிரிவு 35-A) பலகட்ட எதிர்ப்புகளுக்கு மத்தியில், 2019 ஆகஸ்டில் மோடி தலைமையிலான அரசு நீக்கியது. மாநில சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது மட்டுமல்லாமல், மாநிலமாக இருந்த ஜம்மு காஷ்மீரை, லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்தது.

அதைத்தொடர்ந்து தற்போது மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள 2020-2021 ஆண்டு அறிக்கையின் மூலம், ``இந்திய அரசு, ஜம்மு காஷ்மீர் அரசுக்கு அதன் தொடக்கத்திலிருந்து பாதுகாப்பு தொடர்பான செலவுகள் திட்டத்தின் கீழ் ரூ.9,120.69 கோடி ரூபாய் வழங்கியுள்ளது” என்பது தெரிய வந்துள்ளது. ஜம்மு காஷ்மீர் பிரிக்கப்பட்ட 2019 ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரையில் செலவிடப்பட்ட ரூ.448.04 கோடியும் இதில் அடங்கும் என குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ஸ்டாக் ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி இன்ஸ்டிட்யூட் நிறுவனம் வெளியிட்டிருந்த அறிக்கையின்படி, உலகளவில் ராணுவத்துக்கு அதிக செலவிடும் நாடுகள் பட்டியலில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



from தேசிய செய்திகள் https://ift.tt/iT48BAJ

Post a Comment

0 Comments