நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றிவரும் இஸ்லாமிய மருத்துவர் ஒருவர், கடந்த 24.5.2023 அன்று இரவு பணியில் இருந்துள்ளார். அப்போது திருப்பூண்டி பகுதியைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி மாவட்ட விருந்தோம்பல் பிரிவு தலைவர் புவனேஸ்வர் ராம் என்பவர் இரவு 11.30 மணியளவில், ``அரசு பணியின் போது மருத்துவர் ஏன் ஹிஜாப் அணிய வேண்டும்... மருத்துவருக்கு என்று சீருடை கிடையாதா? உண்மையிலேயே நீங்கள் மருத்துவர் தானா? எனக்கு சந்தேகமாக இருக்கிறது” என்று கேள்வி எழுப்பி தனது செல்போன் மூலம் வீடியோ பதிவு செய்துள்ளார்.
அந்த பெண் மருத்துவர், “பெண்கள் பணியில் இருக்கும்போது அசிங்கமாக பேசிக்கொண்டிருக்கிறார். ஒரு பெண் மருத்துவரை அவரின் அனுமதியில்லாமல் வீடியோ எடுத்துக்கொண்டிருக்கிறார்” எனச் சொல்லி அவரும் வீடியோ எடுத்துள்ளார். இந்த இரு காட்சிகளும் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மருத்துவருக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினர் திருப்பூண்டியில் போராட்டம், மறியல் நடத்தியுள்ளனர். அப்போது போலீஸர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இச்சம்பவம் குறித்து கீழையூர் போலீஸாரிடம் பேசிய போது, போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.
இந்த டாஸ்மாக் இங்கு வேண்டாம்! #RemoveThisTasmac
from India News https://ift.tt/3jILr0H
0 Comments