`வயசாகிப்போய், பல் விழுந்த பிறகும் நடிப்பதில்லையா?!’ - ரஜினிக்கு துரைமுருகன் பதிலடி

தி.மு.க அமைச்சர் எ.வ.வேலு எழுதிய `கலைஞர் எனும் தாய்’ புத்தக வெளியீட்டு விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் ``முதல்வர் பதவியை கட்டிக் காக்க பக்கத்து மாநிலங்களில் எத்தனை கஷ்டப்படுகிறார்கள், திண்டாடுகிறார்கள் என்பதை நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். ஆனால், இங்குச் சாதாரணமாக கையாள்கிறார் ஸ்டாலின். ஆச்சர்யமான விஷயம், பிரமித்துப்போவது என்னவென்றால் ஸ்கூல் டீச்சருக்கு நியூ ஸ்டூடன்ட்ஸ் ப்ராப்ளமே கிடையாது. பழைய ஸ்டூடன்ட்ஸ்களைச் சமாளிப்பது சாதாரண விஷயம் அல்ல.

நடிகர் ரஜினிகாந்த்

இங்கும் ஏகப்பட்ட பழைய ஸ்டூடன்ட்ஸ்கள் இருக்கிறார்கள். சாதாரணமான பழைய ஸ்டூடன்ட்ஸ்கள் இல்லை. அசாத்தியமானவர்கள். ஃபெயில் ஆகிவிட்டு இவர்கள் அமர்ந்திருக்கவில்லை. ரேங்க் வாங்கிவிட்ட பிறகும் `கிளாஸை விட்டுப் போக மாட்டோம்’ என்று உட்கார்ந்துகொண்டிருக்கிறார்கள்.

அதிலும், துரைமுருகன் என்று ஒரு பழைய மாணவர் இருக்கிறார். அவர் கலைஞர் கண்ணிலேயே விரல் விட்டு ஆட்டியவர். ஸ்டாலின் சார் `ஹேட்ஸ் ஆஃப் டு யூ’ என தனக்கே உரித்தான பாணியில் சிரித்தபடி பேசினார். ரஜினியின் பேச்சைக் கேட்டு மேடையில் அமர்ந்திருந்த முதல்வர் ஸ்டாலின் உட்பட அரங்கத்தில் இருந்த அனைவருமே ரசித்து சிரித்தனர். அரங்கமே கலகலப்பாக காணப்பட்டது.

அமைச்சர் துரைமுருகன்

இதையடுத்து, காட்பாடியில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் துரைமுருகனிடம் ரஜினியின் `ஓல்டு ஸ்டூடன்டன்ஸ்’ பேச்சுக் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த துரைமுருகன், ``அதே மாதிரி தான் மூத்த நடிகர்கள் எல்லாம் வயசாகிப்போய், பல் விழுந்து, தாடி வளர்த்த நிலைமையிலும் நடிப்பதால் இளைஞர்களுக்கு வாய்ப்பில்லாமல் இருக்கிறதா...?’’ என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88



from India News https://ift.tt/t1f4Ohj

Post a Comment

0 Comments