ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு பத்ம விருதுகள் மத்திய அரசால் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் பெறுவோர் பட்டியல் குடியரசு தினத்தையொட்டி கடந்த ஜனவரியில் வெளியிடப்பட்டது. அதில், மூன்று பேருக்குப் பத்மவிபூஷன் விருதும், ஒன்பது பேருக்குப் பத்மபூஷன் விருதும், 91 பேருக்குப் பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டது. இதில் முதல் கட்டமாக 50 பேருக்கு கடந்த மாதம் பத்ம விருதுகள் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், இரண்டாம் கட்டமாக மீதம் உள்ளவர்களுக்குப் பத்ம விருதுகளை டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவி திரௌபதி முர்மு வழங்கினார். அதில் கர்நாடகத்தைச் சேர்ந்த மூத்த கைவினைக் கலைஞரான ஷா ரஷீத் அகமது குவாத்ரி-க்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. ஷா ரஷீத் அகமது குவாத்ரி விருது பெற்ற பின்னர், பிரதமருடன் கைகுலுக்கியபோது இருவரும் சில நிமிடங்கள் பேசிக்கொண்டனர்.
அப்போது ஷா ரஷீத் அகமது குவாத்ரி, ``நான் உங்களைப் பற்றி மதிப்பிட்டதைத் தவறு என நிரூபித்துவிட்டீர்கள். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் பத்ம விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அது கிடைக்கவில்லை. நீங்கள் ஆட்சிக்கு வந்தபோது பா.ஜ.க அரசு எனக்கு எந்த விருதையும் வழங்காது என்று நினைத்தேன். ஆனால் நீங்கள் எனக்கு விருது வழங்கியிருக்கிறீர்கள். உங்கள் ஆட்சியில் எனக்கு விருது கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. எனவே, உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்திருக்கிறார்.
from India News https://ift.tt/3RH0K1L
0 Comments