மகாராஷ்டிரா அரசியலில் ட்விஸ்ட்?! - அஜித் பவார், 7 எம்.எல்.ஏ.க்கள் நாட் ரீச்சபிள்... சரத் பவார் ஷாக்!

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சரத் பவாருக்கு அடுத்த இடத்தில் அஜித் பவார் இருக்கிறார். அடுத்த முதல்வர் என்று அனைவராலும் முன்னிறுத்தப்பட்டும் வருகிறார் அஜித் பவார். ஆனால் சமீப காலமாக சரத் பவாருக்கும், அஜித் பவாருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் முன்னாள் துணை முதல்வர் அஜித் பவார் திடீரென நேற்று தனது இரண்டு நாள் நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்து விட்டு, தனது பாதுகாவலர்கள் மற்றும் ஊழியர்களையும் வேண்டாம் என்று சொல்லி விட்டு தனியார் வாகனத்தில் புறப்பட்டு சென்றுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. எனினும் சரத்பவார் கூப்பிட்டதால்தான் அவர் புறப்பட்டு சென்றதாகவும் கூறப்பட்டது.

ஆனால் அவருடன் சேர்ந்து மேலும் 7 எம்.எல்.ஏ.க்கள் காணாமல் போய் இருக்கின்றனர். அவர்கள் கட்சி தலைவர்களின் போனை எடுத்து பேச மறுத்து வருகின்றனர் என்ற தகவலும் தற்போது மகாராஷ்டிரா அரசியலில் புயலை கி்ளப்பியுள்ளது. கட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் நோக்கத்தில் அவர்கள் தொடர்பு எல்லைக்கு வெளியில் இருக்கிறார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பான செய்தி சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. அவர்களில் சிலர் கொரோனா பாதிப்பு காரணமாக போனை எடுத்து பேசாமல் இருக்கலாம் என்றும் ஒரு விளக்கம் அளிக்கப்படுகிறது. ஏற்கனவே அஜித்பவார் கடந்த 2019ம் ஆண்டு திடீரென மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்0வுடன் சேர்ந்து ஆட்சி அமைத்தார்.

அந்த அரசு சில நாள்கள் மட்டுமே நீடித்தது. இதனால் இப்போதும் அஜித்பவார் பா.ஜ.க.வுடன் எதாவது தொடர்பு வைத்துக்கொண்டு அக்கட்சியுடன் சேரப்போகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இதனை கட்சியின் செய்தித்தொடர்பாளர் நவாப் மாலிக் மறுத்துள்ளார். ``அஜித்பவாரும், 7 எம்.எல்.ஏ.க்களும் கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுவதில் எந்த வித உண்மையும் கிடையாது. அவர்களுடன் கட்சி தலைமை தொடர்பில் இருக்கிறது. கவலைப்படவேண்டிய அவசியம் இல்லை” என்று தெரிவித்தார்.

தேவேந்திர பட்னாவிஸ், பகத்சிங் கோஷ்யாரி, அஜித் பவார்

கட்சியில் இருக்கும் அதிகாரப்போட்டி காரணமாக அஜித் பவார் அதிருப்தியில் காணாமல் போய் இருப்பதாகவும் கூறப்படுகிறது. சரத்பவார் தனது சகோதரர் மகன் ரோஹித்பவாருக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுப்பதாக அஜித் பவார் நினைக்கிறார். அஜித் பவாரும் சரத் பவாரின் சகோதரர் மகன் தான். ஆனாலும் ரோஹித் பவாரும், அஜித் பவாரும் கட்சியில் தங்களுக்கு தான் அதிக அதிகாரம் இருப்பதாக நினைத்துக்கொள்கிறார்கள்.



from India News https://ift.tt/0Tf7VRr

Post a Comment

0 Comments