'ஸ்டாலின் தைரியமான முதல்வர்; திமுக ஆட்சி திருப்தியாக உள்ளது' - நடிகர் சத்யராஜ்

கோவை வஉசி மைதானத்தில், ‘எங்கள் முதல்வர் எங்கள் பெருமை.’ என்ற பெயரில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் புகைப்பட கண்காட்சியை நடிகர் சத்யராஜ் திறந்து வைத்தார். கண்காட்சியை பார்வையிட்ட சத்யராஜ் கருத்து பதிவேட்டில், "வரலாற்று நாயகனை பற்றிய வரலாறை அறிந்த பெருமிதத்தோடு மகிழ்ந்தேன்.

சத்யராஜ்

வாழ்க திராவிட மாடல் - மாண்புமிகு முதல்வருக்கு வாழ்த்துகள்" என்ற கருத்தை பதிவு செய்துள்ளார்.

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சத்யராஜ், “கோவையில் போடப்பட்டுள்ள இந்த புகைப்பட கண்காட்சி மிகச்சிறப்பாக இருந்தது.  முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தது முதல் அனைத்து புகைப்படமும் இங்குள்ளது. ஸ்டாலின்  மிசாவில் கைதாகவில்லை என அடிக்கடி கூறுவார்கள்.

முதல்வர் புகைப்பட கண்காட்சி

ஆனால் இங்கு மிசாவில் போடப்பட்ட முதல் தகவல் அறிக்கையுடன் காட்சிபடுத்தப்பட்டுள்ளது. தைரியமான முதல்வர். எந்த இடத்தில் வலுவாக இருக்க வேண்டும், எங்கு அரவணைக்க வேண்டும் என சரியாக செயல்படுகிறார்.

இரண்டு ஆண்டு திமுக ஆட்சி மிகவும் திருப்திகரமாக உள்ளது. என்னைப் போன்ற வசதி படைத்தவர்கள் எந்த ஆட்சி வந்தாலும் நன்றாக தான் இருப்போம். நடுத்தர மக்கள் மற்றும் அவர்களுக்குக் கீழே இருப்பவர்களுடன் பேசுவேன். அவர்கள் திருப்திகரமாக உள்ளது என தெரிவிக்கிறார்கள். ஆளுநர் இவ்வாறு நடந்து கொள்ள வேண்டியதில்லை.

ஆளுநர் ரவி

ஏன் அப்படி நடந்து கொள்கிறார் என்று தெரியவில்லை.  நல்ல காரியத்திற்கு, நல்ல திட்டத்திற்கு ஆதரவாக செயல்பட வேண்டும். மக்கள் நலமே முக்கியம் அதனை மனதில் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.” என்றார்.



from India News https://ift.tt/dguGH6V

Post a Comment

0 Comments