'தொடரும் சர்ச்சை கருத்துகள்' - ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அசைன்மென்ட் கொடுக்கப்படுகிறதா?!

தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றது முதல் சர்ச்சைக்கு பஞ்சமில்லாத கன்டென்டுகளை கொடுத்து வருகிறார். குறிப்பாக மதபோதகரான ஜி.யு.போப் திருக்குறளில் உள்ள ஆன்மிக சிந்தனைகளை, பக்தி கண்ணோட்டத்தை நீக்கி பெரிய அவமதிப்பை செய்திருக்கிறார்.

திருக்குறள்

மிஷனரியாக இந்தியாவுக்கு வந்த ஜி.யு.போப்பின் உள்நோக்கம் கொண்ட திருக்குறள் மொழிபெயர்ப்பு ஆன்மா இல்லாத சவம் போல இருக்கிறது. முதல் திருக்குறளில் உள்ள ஆதி பகவன் என்ற வார்த்தை ரிக் வேதத்தில் இருந்து பெறப்பட்டது. அது இந்திய ஆன்மிகத்தின் மையப்புள்ளி.

திருவள்ளுவர் ஒரு ஆன்மீகவாதி; ரிஷிகளாலும் முனிவர்களாலும் சனாதன தர்மத்தின் ஒளியாலும் இந்த நாடு உருவானது; மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை என்பது பாரதிதாசனும், பாரதியாரும் கனவு கண்ட புதிய இந்தியாவை உருவாக்கும் நோக்கம் கொண்ட புரட்சிகர ஆவணம்; கோயம்புத்தூர் பயங்கரவாதத்துக்குப் பெயர் போன இடம்; பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா, மிகவும் ஆபத்தான இயக்கம்” என்பது போன்றவை முக்கியமானதாகும்.

ஸ்டெர்லைட் ஆலை

இந்நிலையில் தான் தற்போது, ``தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையானது நாட்டின் 40% காப்பர் தேவையை பூர்த்தி செய்து வந்தது. நாட்டின் வளர்ச்சிக்கு காப்பர் எந்த அளவிற்கு முக்கியமானது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், நாட்டின் வளர்ச்சியை தடுக்கும் விதமாக வெளிநாடுகளிலிருந்து பணத்தைப்பெற்றுக் கொண்டு மக்களை தூண்டிவிட்டு, ஸ்டெர்லைட் ஆலையை மூட வைத்துவிட்டனர்” என்று பேசியிருக்கிறார்.

இது தமிழகம் முழுவதும் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே இவ்வாறு தமிழகத்தை கருத்து மோதல் ரீதியில் ‘பிஸி’யாக வைத்துக்கொள்ள ஆளுநர் ரவிக்கு ‘அசைன்மென்ட்’ பண்ணப்படுகிறதா? என்ற கேள்வி எழுகிறது.

பிரியன்

இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் பிரியன். "ஆளுநர் ரவியின் கருத்துக்கள் மிகவும் மோசமாக இருக்கிறது. அரசியல் சட்ட பதவியில் அமர்ந்திருப்பவர் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தை சாவல் விடும் வகையில் பேசிக்கிக்கொண்டிருக்கிறார். ஆளுநர் சர்ச்சைக்குறிய கருத்துக்களை பேசக்கூடாது.

பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளலாம், திட்டங்களை திறந்து வைக்கலாம். அப்போது நேர்மறையாக பேச வேண்டும். சர்ச்சைக்குறிய விஷயங்களை பேசக்கூடாது. தற்போது கூட ஸ்டெர்லைட் விஷயத்தை பேசியிருக்கிறார். அதில் 13 பேர் இறந்திருக்கிறார்கள். 100 நாள் போராட்டம் நடந்திருக்கிறது. பிறகு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.

சிபிஐ

ஸ்டெர்லைட் மூடப்பட்டது. சிபிஐ விசாரணை நடந்து வருகிறது. இவ்வளவு நடந்திருக்கும் பொழுது வெளிநாடுகளிலிருந்து பணத்தைப்பெற்றுக் கொண்டு மக்களை தூண்டிவிட்டு, ஸ்டெர்லைட் ஆலையை மூட வைத்துவிட்டனர் என்று சொல்வது அங்கிருக்கும் மக்களை அவமானப்படுத்துவது போல் இருக்கிறது.

இதேபோல் தான் தமிழ்நாடு, திராவிடம் என அனைத்து விஷயங்களிலும் சரியாக தெரிந்துகொள்ளாமல் ஆர்எஸ்எஸ் சொல்வதை கிளிபிள்ளை சொல்வதை போல் சொல்லிக்கொண்டிருந்தால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். இதை எப்படி பொறுப்பாக பேசுகிறார் என்று எடுத்துக்கொள்ள முடியும்.

மு.க ஸ்டாலின் - ஆளுநர் ரவி

பொறுப்பில்லாம் திமுக அரசை கஷ்டப்படுத்தும் நோக்கில் பேசிக்கொண்டிருக்கிறார். அவருக்கும் கொடுத்திருக்கும் அசைன்மென்டை சரியாக செய்கிறார். இதெல்லாம் தேவையில்லாதது. செய்ய வேண்டியது கிடையாது. மசோதாக்களுக்கு ஒப்புதல் வாங்காமலே வைத்திருந்தால், அது நிராகரிப்பதாக அர்த்தம் என்று சொல்வது எந்த அரசியல் சட்டத்தில் இருக்கிறது என்று தெரியவில்லை.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அனுப்பிய மசோதாக்களை நிராகரிக்க வேண்டிய அவசியமே இல்லை. இவருக்கு தான் அரசியலமைப்பு சட்டம் தெரியும், தேசத்தினுடைய நிலைமை தெரியும் என்று பேசிக்கொண்டிருந்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் எப்படி செயல்பட முடியும். ஆர்எஸ்எஸ்ன் திட்டங்களை தான் நிறைவேற்றி வருகிறார்" என்றார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி. "ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு தான் எதையும் செய்வார்...செய்தார். ஆளுநர் என்ன பேச வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டியது அரசியவாதிகள் அல்ல.

ஆர்எஸ்எஸ்

இந்திய அரசியலமைப்பு சட்டம் தான் முடிவு செய்யும். தன்னுடைய எல்லை என்னவென்று ஆளுநருக்கு தெரியும். அவர் சட்டத்துக்கு புறம்பாகவோ, ஜனநாயகத்தை மீறியோ என்றும் பேசமாட்டார். இதில் குறுகிய நோக்கம் கொண்ட சில மலிவான அரசியல் விளம்பரம் தேடுபவர்கள் ஆளுநர் தங்களுடைய கைப்பாவையாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஆளுநரிடம் குறை காண்கிறார்கள்" என்றார்.



from India News https://ift.tt/As8Nh3k

Post a Comment

0 Comments