`சிலிக்கான் வேலி' வங்கி திவாலானது | தாய்லாந்தில் அதிகரிக்கும் காற்று மாசு - உலகச் செய்திகள்

உக்ரைனின் Bakhmut பகுதியில் நடந்துவரும் தாக்குதலில், 500-க்கும் அதிகமான ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைனின் ராணுவ செய்தித் தொடர்பாளர் தகவல் தெரிவித்திருக்கிறார்.

அதிபர் ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வர்த்தகக் கொள்கை, பேச்சுவார்த்தைகளுக்கான ஆலோசனைக் குழுவில் இரு இந்திய-அமெரிக்கர்களான Flex நிறுவனத்தின் CEO ரேவதி அத்வைதி, Natural Resources Defense Council-ன் CEO மணீஷ் பாப்னா ஆகியோரை நியமித்திருக்கிறார்.

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவிலுள்ள சிலிக்கான் வேலி வங்கி திவாலானது உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் காரணமாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கலிஃபோர்னியா கவர்னர் கவின் நியூசோமிடம் நிலைமை குறித்துப் பேசியதாக வெள்ளை மாளிகை தெரிவித்திருக்கிறது.

தாய்லாந்தில் காற்று மாசு அதிகரித்துவருவதால், கடந்த வாரத்தில் மட்டும் இரண்டு லட்சம் மக்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

சுவிட்சர்லாந்தில் அடுத்த மாதம், 67 மில்லியன் ஆண்டுகள் பழைமையான டி ரெக்ஸ் டைனோசரின் எலும்புக்கூடு ஏலத்துக்கு வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

ஆப்கானிஸ்தானில் பத்திரிகையாளர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் குண்டு வெடித்தது. இதில் காவலர் ஒருவர் உயிரிழந்த நிலையில், பத்திரிகையாளர்கள், குழந்தைகள் உட்படப் பலர் காயமடைந்தனர்.

கலிஃபோர்னியாவைத் தாக்கிவரும் கடுமையான புயலின் காரணமாக, ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுவருகின்றனர்.

இஸ்ரேலில் நீதித்துறையில் மாற்றங்கள் கொண்டுவருவதைக் கண்டித்து, அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெடன்யாஹுவுக்கு எதிராக பத்தாவது வாரமாகப் போராட்டங்கள் தொடர்கின்றன.

34 நாள்களுக்குப் பிறகு மீண்டும் வலுப்பெற்ற ஃப்ரெட்டி புயலால், மொசாம்பிக் நாட்டில் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். அதிக நாள்கள் நீடிக்கும் புயலாக ஃப்ரெட்டி மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

கோவிட் தொற்றுக்குக் காரணமான வைரஸ் எலிகளையும் பாதிக்கக் கூடும் என நியூயார்க்கில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டிருக்கிறது.



from India News https://ift.tt/3Wmkydr

Post a Comment

0 Comments