100 யூனிட் இலவச மின்சாரம் குறித்து சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவி வருகிறது. அதற்குப் பதிலளிக்கும் வகையில், 100 யூனிட் இலவச மின்சார திட்டம் தொடரும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, ``திருச்சி திருவெறும்பூரில் உள்ள அதிகாரி ஒருவர், உயர் அதிகாரிகளுடன் ஆலோசிக்காமல், வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் இருந்தால், அவற்றை ஒரே மின் இணைப்பாக மாற்றவேண்டும் எனச் சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார்.
இது சமூக ஊடகத்தில் பரவி அனைவரின் கவனத்தையும் பெற்றது. மின்வாரியம் அத்தகைய உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை.
ஒரு நபர் ஒரே வளாகத்தில் பல மின் இணைப்புகளை வைத்திருந்தாலும், நாங்கள் அதை இணைக்க மாட்டோம் மற்றும் இலவச யூனிட் மின்சாரம் தொடரும்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தற்போதைய அரசு விவசாயத்திற்கு 18 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கி வருகிறது. விநியோக உள்கட்டமைப்பை வலுப்படுத்திய பின், அடுத்த ஆண்டு முதல் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்குவோம்'' என்று தெரிவித்துள்ளார்.
from India News https://ift.tt/sUpM4Wv
0 Comments