``இதுதான் எனது கடைசி தேர்தல்!" - கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா

கர்நாடகா சட்டமன்றத்தின் பதவிக்காலம் 2023 மே 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, மே மாதத்துக்கு முன்பு சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், கர்நாடகாவில் அரசியல் கட்சிகள் பரபரப்பாக தேர்தல் வியூகங்களை அமைத்து தீவிர பிரசாரம் மேற்கொண்டுவருகின்றன.

இந்த நிலையில், 'பிரஜா த்வானி யாத்திரை' பொதுக்கூட்டத்தில் பேசிய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், கர்நாடக மாநில முன்னாள் முதல்வருமான சித்தராமையா, ``கர்நாடக மக்களின் ஆசியுடன் முதல்வராகும் வாய்ப்பு 2013-2018 வரை கிடைத்தது. தேவ்ராஜ் அர்ஸ்ஸுக்குப் பிறகு முழு ஐந்தாண்டுக்காலம் முதல்வராக இருந்த ஒரே முதல்வர் நான்தான். நாங்கள் ஆட்சிக்கு வந்தால், 10 கிலோ அரிசி, 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு 2,000 ரூபாய் வழங்குவோம்.

சித்தராமையா

நீங்கள் எங்களை நம்புகிறீர்கள், இல்லையா... எவ்வளவு சிரமம் வந்தாலும் வாக்குறுதியை நிறைவேற்றுவோம். இதுவே எனக்கு கடைசி தேர்தல். ஆனால், அரசியலிலிருந்து ஓய்வுபெற மாட்டேன். உங்கள் அனைவருக்காகவும் தொடர்ந்து உழைப்பேன்" என்று கூறினார்.

இதற்கு முன்னர் ஒரு நிகழ்ச்சியில் சித்தராமையா, ``ஆட்சிக்கு வந்த பிறகு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாவிட்டால், அரசியலிலிருந்து ஓய்வுபெற்று வீடு திரும்புவேன்" என்று கூறியது குறிப்பிடத்தக்கது.



from India News https://ift.tt/McgBHSZ

Post a Comment

0 Comments