2023-24-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை இந்த மாதம் 1-ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதில், வெளியுறவு அமைச்சகத்துக்கு (MEA) மொத்தம் ரூ.18,050 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட ரூ.17,250 கோடியைவிட சுமார் 4.64 சதவிகிதம் அதிகம். மேலும், இதிலிருந்து ஆப்கானிஸ்தான் நாட்டின் வளர்ச்சி நிதி தொகுப்பாக ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டது.
தாலிபன்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு, அந்த நாட்டுக்கு இரண்டாவது ஆண்டாக இந்தியா நிதி உதவி அறிவித்திருக்கிறது. பட்ஜெட்டில் ஆப்கானிஸ்தானுக்கு வளர்ச்சி நிதி தொகுப்பு அறிவித்ததற்கு ஆப்கானிஸ்தான் வரவேற்பு தெரிவித்திருந்தது. இந்த நிலையில், டெல்லியின் கல்வி, சுகாதாரத்துக்கான நிதி ஒதுக்கீட்டை குறைத்து தாலிபன்கள் ஆட்சி செய்யும் ஆப்கானிஸ்தானுக்கு நிதி வழங்குவது சரிதானா என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வியெழுப்பியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மத்திய அரசு ஏன் எல்லோருடனும் சண்டையிடுகிறது... நீதிபதிகள், உச்ச நீதிமன்றம், மாநில அரசுகள், விவசாயிகள், வணிகர்கள் என அனைவருடனும் சண்டையிட்டால் நாடு முன்னேறாது. அவரவர் வேலையை அவரவர் செய்யட்டும். பிறர் வேலையில் தலையிடாதீர்கள். தாலிபன்களுக்கு நிதியளிக்க நாட்டில் கல்வி, சுகாதாரத்தில் சமரசம் செய்து, டெல்லிக்கான நிதியை குறைப்பது சரியா? மக்கள் அதைக் கடுமையாக எதிர்க்கிறார்கள்" எனத் தெரிவித்திருக்கிறார்.
from India News https://ift.tt/aURNVKC
0 Comments