கர்நாடக மாநிலம் பெங்களூரு தெற்கு பகுதியை சேர்ந்த காமாட்சிபாளையா ஸ்டேஷன் போலீஸார், 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாக, 26 வயது வாலிபரை கைது செய்துள்ளது, பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விசாரணையில், காவேரி நகரில் வசித்து வந்த இறந்த சிறுமியின் தாய், ஆடை தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த அவருக்கு, அப்பகுதியை சேர்ந்த, 26 வயதான வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் திருமணம் மீறிய உறவில் இருந்ததுடன், கடந்த ஓராண்டாக சிறுமியின் தாய் வேலைக்கும் செல்லும் நேரங்களில், அந்த வாலிபர் சிறுமியை கவனித்து வந்துள்ளார்.
நேற்று, கஞ்சா போதையில் இருந்த அந்த வாலிபர், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அதில் மயக்கமடைந்து சிறுமி இறந்துள்ளார். சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் நேற்று, இரவு அந்த வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.
இது குறித்து காமாட்சிபாளையா போலீஸாரிடம் பேசினோம், ‘’26 வயதான தேவராஜ் என்ற அந்த வாலிபர், சிறுமியின் தாயுடன் ஓராண்டாக திருமணம் மீறிய உறவில் இருந்துள்ளார். அதிக அளவு கஞ்சா போதையில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார். வாலிபரை கைது செய்து, போக்சோ, பாலியல் வன்கொடுமை (IPC 376), கொலை (IPC 302) உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளோம். திருமணம் மீறிய தவறான உறவு, அதீத கஞ்சா போதையால் இந்த விபரீதம் நடந்துள்ளது,’’ என்றனர்.
கஞ்சா போதை, குற்றசம்பவங்களுக்கு அச்சாரமாக மாறி வருவது வேதனை அளிப்பதாக உள்ளது.
from தேசிய செய்திகள் https://ift.tt/eTfEiOh
0 Comments