மத்தியப்பிரதேச மாநிலம், அனுப்பூர் மாவட்டத்தை சேர்ந்த நரசிங் என்பவர் அங்குள்ள நிலக்கரிச்சுரங்கத்தில் அரசு ஊழியராக பணியாற்றி வந்தநிலையில், கடந்த 2020-ம் ஆண்டு இறந்து போனார். 36 ஆண்டுகள் நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றியிருக்கிறார். ஆனால் நரசிங் உண்மையில் நிலக்கரி சுரங்கத்தில் தாதாய் ராம் என்ற பெயரில் வேலை செய்து ஓய்வு பெற்றிருக்கிறார். நர்சிங் இறந்த பிறகு அவரின் மனைவி தான் தாதாய் ராம் மனைவி என்று கூறி வங்கியில் தனி கணக்கு திறந்து அரசிடமிருந்து கிடைக்கவேண்டிய அனைத்து பணத்தையும் பெற்றுக்கொண்டார். அத்தோடு விடாமல் நரசிங் மகன் தன் தந்தை வேலை செய்த நிலக்கரி சுரங்கத்தில் வேலை கேட்டு சென்றார். அங்கு சென்ற போதுதான் நரசிங் செய்த மோசடி தெரிய வந்தது.
நரசிங் மகன் கிலாவன் இது குறித்து விசாரித்த போது அவரின் தந்தை நரசிங் பெயரில் யாரும் வேலை செய்யவில்லை என்று தெரிய வந்தது. அதன் பிறகு முழுமையாக விசாரித்த போதுதான் நரசிங் வேறு ஒருவரின் அடையாள அட்டையை திருடி அரசு வேலை செய்தது தெரிய வந்தது. நரசிங்கும், தாதாய் ராம் என்பவரும் பக்கத்து பக்கத்து வீட்டில் தங்கியிருந்து நிலக்கரி சுரங்கத்தில் வேலை செய்து வந்தனர்.
ஒவ்வொரு நாளும் வேலை செய்து முடித்தவுடன் தாதாய் ராம் தன்னுடைய அடையாள அட்டையை நரசிங்கிடம் கொடுத்து வைத்திருந்தார். ஒரு கட்டத்தில் அனைவருக்கும் வேலை இல்லை என்று சொல்லிவிட்டார்கள். அதேசமயம் நரசிங்கிடம் தாதாய் ராம் அடையாள அட்டை இருந்தது. தாதாய் ராம் தன் குடும்பத்தோடு சத்தீஸ்கர் சென்றுவிட்டார்.
திடீரென வேலை செய்த அடையாள அட்டை அடிப்படையில் மீண்டும் நிலக்கரி சுரங்கத்தில் வேலை வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. நரசிங்கிடம் இருந்த அடையாள அட்டையை பயன்படுத்தி அவரால் வேலை பெற முடியவில்லை. உடனே தாதாய் ராம் அடையாள அட்டையில் மோசடி செய்து 1984-ம் ஆண்டு நரசிங் அரசு வேலை பெற்றது தெரிய வந்தது. உண்மையான தாதாய் ராம் யார் என்று கிலாவன் தேடிச்சென்ற போதுதான் அவர் சத்தீஸ்கரில் வறுமையில் வாடுவது தெரிய வந்தது. இது குறித்து நிலக்கரி சுரங்க நிர்வாகம் தனியாக விசாரணை நடத்தி வருகிறது.
from தேசிய செய்திகள் https://ift.tt/KXrk209
0 Comments