இறந்த நிலையில் மரத்தில் தொங்கிய புலி... தொடரும் புலன்விசாரணை!

மத்திய பிரதேசம், விக்ரம்பூர் பன்னா புலிகள் காப்பகத்தின் ஒரு மரத்தில் 2 வயது ஆண் புலி ஒன்று, சுறுக்கு கயிற்றில் தொங்கி இறந்த நிலையில் இருந்துள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, புலியின் இறப்புக்கான காரணத்தை அறிய வனத்துறை அதிகாரிகள் அங்கு விரைந்தனர். மோப்ப நாய்கள் மூலமாகச் சம்பவ இடத்தில் சோதனை நடத்தினர். 

அங்கு விசாரணையின் போது கிடைத்த தகவலின்படி, கிராம மக்கள் வேறு ஏதேனும் விலங்குகளை வேட்டையாட அங்கே தூண்டில் சுருக்கு கயிற்றை வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்பட்டுத்தியுள்ளது. ஒருவேளை கிராம மக்களுக்கு ஏதேனும் தகவல் தெரிந்தால், தங்களிடம் தெரிவிக்கும்படி போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

அப்படி தகவல்கள் கிடைக்கும்பட்சத்தில், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். 

investigation

இதுகுறித்து சத்தர்பூர் மலைத்தொடரின் வன பாதுகாவலர் சஞ்சீவ் ஜா கூறுகையில், ``அவ்வளவு உயர மரத்தில் புலி எப்படிச் சென்றது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எனவே புலியின் உறுப்புகளின் மாதிரிகள் ஆய்வுக்காக எடுக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.  பிரேதப் பரிசோதனையும் நடைபெற்று வருகிறது'' என்று தெரிவித்துள்ளார்.  



from தேசிய செய்திகள் https://ift.tt/O6EwLj7

Post a Comment

0 Comments