திருமணத்தை நிறுத்திய பெண் வீட்டார்; உதாசீனப்படுத்திய மணமகள் - மனஉளைச்சலில் விபரீத முடிவெடுத்த இளைஞர்

பெங்களூரின் மாகடியிலுள்ள திப்பசந்திரா பகுதியைச் சேர்ந்தவர் மோகன் குமார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு காவியாஶ்ரீ எனும் பெண்ணுடன் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது. திருமணத்துக்குப் பிறகு அந்தப் பெண் படிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதாகவும், அதற்கு மணமகன் விட்டார் சம்மதித்ததாகவும் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தன. திருமண ஏற்பாட்டுக்காக மணமகன் பெண் வீட்டாரிடம் ரூ.10 லட்சம் கொடுத்திருக்கிறார்.

திருமணம்

இதற்கிடையில், மோகன் குமார் தொடர்பான சில வதந்தியான தகவல்கள் பெண் வீட்டாரிடம் கூறப்பட்டதாகத் தெரிகிறது. அதனால், மோகன் குமாரை பெண் வீட்டார் அழைத்து, திருமணத்தை நிறுத்தும்படி கூறியிருக்கிறார்கள். ஆனாலும், மோகன் குமார் தன் பெற்றோருடன் சென்று பெண் வீட்டாரிடம் பேசியிருக்கிறார். அப்போதும் பெண் வீட்டார் திருமணத்தை நிறுத்தும் முடிவில் உறுதியாக இருந்திருக்கிறார்கள்.

மேலும், மோகன் குமாரையும், அவரின் பெற்றோரையும் அவமானப்படுத்தி வீட்டைவிட்டு வெளியேற்றியதாகக் கூறப்படுகிறது. அப்போது காவியாஶ்ரீ, ``உன்னை திருமணம் செய்துகொள்ள முடியாது... வேண்டுமென்றால் செத்துப்போ. இனிமேலும் தொந்தரவு செய்தால் உன்னைக் கொன்று விடுவேன்" என மிரட்டி, ரூ.10 லட்சம் பணத்தை திருப்பி தரமறுத்ததாகக் கூறப்படுகிறது.

காவல்துறை

இதனால் மனமுடைந்த மோகன் குமார், மறுநாள் காலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதைத் தொடர்ந்து, மோகன் குமாரின் தந்தை, பெண்ணின் தந்தை ரங்கஸ்வாமையா (60), காவ்யாஸ்ரீ, அவரின் தாயார், உறவினர் ஜெயராமையா மீது தற்கொலைக்குத் தூண்டியதாக புகார் அளித்திருக்கிறார். இந்தப் புகாரின் அடைப்படையில், காவல்துறை வழக்கு பதிவுசெய்து, விசாரித்து வருகிறது. மேலும், தலைமறைவாக இருக்கும் 4 பேரையும் தேடிவருகிறது.



from தேசிய செய்திகள் https://ift.tt/qJlagiS

Post a Comment

0 Comments