உத்தரப்பிரதேசத்தின் பிரதாப்கர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரேனு. இவரின் கணவர் ராஜஸ்தானில் வேலை செய்து பணத்தை வீட்டுக்கு அனுப்பி வந்தார். அந்த பணம் முழுவதையும் சூதாட்டத்தில் இழந்து வந்தார் ரேனு. தன் வீட்டு நிலக்கிழாருடன் அடிக்கடி சூதாட்டம் விளையாடுவது வழக்கம். ஒரு முறை அந்தப் பெண் தன் நிலக்கிழாருடன் (landlord) சேர்ந்து சூதாட்டம் விளையாடிக்கொண்டிருந்தார். அதில் அந்தப் பெண்ணிடம் இருந்த பணம் முழுவதும் காலியாகிவிட்டது. அந்தப் பெண்ணிடம் சூதாட்டத்தில் வைக்க பணம் இல்லை. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் எப்படியும் விட்ட பணத்தை எடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் தன்னையே சூதாட்டத்தில் பணயமாக வைத்தார்.
ஆனால் துரதிஷ்டவசமாக இதிலும் ரேனு தோல்வியடைந்தார். அதனால், ரேனு நிலக்கிழாருக்குச் சொந்தமானார். இது குறித்து ரேனு தன் கணவருக்கு போன் செய்து நடந்த சம்பவம் முழுவதையும் தெரிவித்தார். உடனே அவரின் கணவர் ராஜஸ்தானிலிருந்து இது குறித்து போலீஸில் புகார் செய்தார். போலீஸார் இது குறித்து விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக ரேனுவின் கணவர் சமூக வலைதளத்திலும் பதிவிட்டிருக்கிறார்.
இது குறித்து ரெனுவின் கணவர் கூறுகையில், ``ஆறு மாதங்களுக்கு முன்புதான் ராஜஸ்தானுக்கு வேலைக்குச் சென்றேன். சம்பாதித்து முழு பணத்தையும் மனைவிக்கு அனுப்பினேன். ஆனால் அதை அவர் சூதாட்டத்தில் இழந்திருக்கிறார். அதோடு பணம் முழுவதையும் இழந்துவிட்டு, தன்னையும் சூதாட்டத்தில் இழந்திருக்கிறார். இப்போது என் மனைவி நிலக்கிழாருடன் இருக்கிறார். அவரை அங்கிருந்து அழைத்து வர முயன்றேன், முடியவில்லை'' என்றார்.
இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
from தேசிய செய்திகள் https://ift.tt/jN9zH4F
0 Comments