உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் பல்கலைக்கழகத்தில் `காசி தமிழ்ச் சங்கமம்' நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்ற வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் எல்.முருகன், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி,"வணக்கம் காசி, வணக்கம் தமிழ்நாடு. காசியும், தமிழ்நாடும் தனது கலாசாரத்தில் சிறந்து விளங்குகிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு இந்த சங்கமமே சாட்சி. சம்ஸ்கிருதம், தமிழ் என இரு மொழிகளுமே சிறந்து விளங்குகிறது.
காசி, தமிழ்நாடு இரண்டுமே சிவமயமானது, சக்திவாய்ந்தது. இரண்டு ஊர்களும் திருக்கோயில்களுக்கு பிரபலமானது. காசியைப் போலவே தமிழ்நாடும் பழைமையானது. சிறப்பான கலாசாரம் கொண்டது. காசிக்கு துளசிதாசரும், தமிழ்நாட்டுக்கு திருவள்ளுவரும் பெருமை சேர்த்திருக்கின்றனர். காசிக்கும், தமிழ்நாட்டிற்கும் நீண்ட நெடிய பந்தம் இருக்கிறது. காசியின் வளர்ச்சியில் தமிழர்கள் பங்கு பல இருக்கிறது.
காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் நீண்ட நெடிய பந்தம் இருக்கிறது. காசியின் சுற்றுவட்டார பகுதிகளில் தமிழ் கோயில்களும் உள்ளன. தமிழக திருமணங்களில் காசி யாத்திரை என்னும் வழக்கம் இருக்கிறது. சுப்ரமணிய பாரதியார் காசியில் வாழ்ந்திருக்கிறார். பனாரஸ் பல்கலைக்கழகத்தில் பாரதியார் தமிழ் இருக்கை அமைக்கப்பட்டிருக்கிறது." எனப் பேசியிருக்கிறார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/7hJcq2S
0 Comments