உத்திரப்பிரதேசத்தில் உள்ள வாரணாசியில் பனாரஸ் பல்கலைக்கழகத்தில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி இன்று பிரதமர் மோடியால் தொடங்கிவைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், இளையராஜா, அண்ணாமலை, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பிரதமர் மோடி வேட்டி, சட்டை அணிந்து காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். `காசி தமிழ் சங்கமம்' நிகழ்ச்சி டிசம்பர் 17 வரை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதன் பிறகு இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ``காசிக்கும், தமிழ்நாட்டிற்கும் மிகப்பெரிய பந்தம் இருக்கிறது. அந்த பந்தத்தை நாம் ஆண்டுகளில் கணக்கிட முடியாது. ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற பாரதியாரின் கனவை நிறைவேற்றும் வகையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி அமைந்திருக்கிறது. பாண்டிய வம்சத்தை சேர்ந்த அதிவீரராம பாண்டியன் காசிக்கு யாத்திரையாக வந்தார். அவர் இங்கிருந்து திரும்பி சென்ற பிறகு, தென்காசியில் மிகப்பெரிய சிவாலயத்தை நிறுவினார். அதேபோன்று அவருடைய மூதாதையர்கள் நம்முடைய சிவகாசியில் ஆலயத்தை நிறுவினார்கள். ஒரே பாரதம் உன்னத பாரதம் என்பதை இணைக்கும் நிகழ்ச்சியாக இது அமைந்திருக்கிறது.
தமிழ்நாட்டின் கலாசாரம், பண்பாடு இன்று உத்தரப்பிரதேசத்தில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் புதிய தேசிய கல்விக் கொள்கையை எடுத்துக்காட்டும் விதமாக இணைப்பு நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி இருக்கிறது. பாரதியார் பெண் விடுதலைக்காக பாடுபட்டவர். சுதந்திரத்திற்காக குரல் கொடுத்தவர். பனாரஸ் பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் இருக்கை அமைத்ததற்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வோம்'' என்றார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/GWBxwVC
0 Comments