சபரிமலை மண்டல பூஜை: பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட சில கட்டுப்பாடுகள் இவைதான்!

உலகப் பிரசுத்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை, மண்டல பூஜைக்காக நேற்று (16.11.2022) திறக்கப்பட்டது. இதனால் தரிசனத்துக்குச் செல்லும் பக்தர்களுக்கு என்று பாதைகளில் பாதுகாப்பு, மருத்துவம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் கேரள அரசு ஏற்பாடு செய்துள்ளது. தினசரி ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வந்தாலும் சமாளிக்கும் வகையில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு சார்பில் அனைத்து விதமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

செங்கனூர் ரயில் நிலையம் உள்ளிட்ட 12 இடங்களில் ஸ்பாட் புக்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் வயதானவர்கள் வரிசையில் நிற்காமல் நேரடியாக தரிசனம் செய்யச் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே ஐயப்ப பக்தர்களுக்கு என்று சில கட்டுபாடுகளையும் அம்மாநில அரசு விதித்துள்ளது. சபரிமலை கோயிலுக்குச் சரக்கு வாகனங்களில் செல்ல அனுமதி இல்லை.

சபரிமலை பக்தர்கள்

இருசக்கர வாகனத்தில் செல்லும் பக்தர்களுக்கு ஹெல்மெட் கட்டாயம், தனியார் வாகனங்களில் செல்லும் பக்தர்கள், நிலக்கலில் வாகனங்களை நிறுத்த வேண்டும். பம்பையில் இடம் இருந்தால் சிறு வாகனங்களை அங்கு நிறுத்திக்கொள்ளலாம். அதிகமான பக்தர்கள் வரக்கூடிய காரணத்தினால் சபரிமலையைத் தூய்மையாக வைத்திருக்க பக்தர்கள் ஒத்துழைக்க வேண்டும்.

பிளாஸ்டிக் பொருள்கள் தடை செய்யப்பட்டுள்ளதால் வரக்கூடிய பக்தர்கள் அவற்றைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் வேண்டுகோள்  விடுத்துள்ளனர். கடந்த இரு ஆண்டுகளாக பக்தர்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அவை தற்போது தளர்த்தப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு கோடிக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.



from தேசிய செய்திகள் https://ift.tt/EYHuyDA

Post a Comment

0 Comments