கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து மாயமாகியுள்ளார். சில மாதங்களுக்கு பிறகு காவல்துறை அவரை மீட்டது. அப்போதுதான் போதையுடன் தன்னை ஏராளமானோர் பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி தகவலை அவர் கூறியிருக்கிறார்.
கொல்லம் பகுதியைச் சேர்ந்த டொனால்டு என்பவர் சிறுமிக்கு நட்பாகியுள்ளார். சிறுமி வேலை தேடி வந்த நிலையில், டொனால்டு வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்துள்ளார்.
பிறகு சிறுமியை ஒரு ஹோட்டலுக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். மேலும் ஹோட்டலின் உரிமையாளர் மற்றும் மேலாளரும் சிறுமியை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்துள்ளனர். அதேபோல வேலைக்கு வாக்குறுதி கொடுத்து, சிறுமியை மேலும் இருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
தொடர்ந்து சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடும் கும்பலைச் சேர்ந்த பெண்ணிடம் ஒப்படைத்துள்ளனர். அவர் மூலம் ஏராளமானோர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இப்படி கடந்த ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை சிறுமி தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளார். இதுதொடர்பாக எர்ணாகுளம், கொல்லம், திருச்சூர், வயநாடு உள்ளிட்ட காவல்நிலையங்களில் 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஏற்கெனவே டொனால்டு கைது செய்யப்பட்ட நிலையில், ஹோட்டல் உரிமையாளர் தாமஸ், சலாம், அஜித்குமார், மனோஜ் சோமன், கிரிஜா, அச்சு, ஆண்டனி, மேத்திவ் உள்ளிட்ட 9 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
21 பேர் போலீஸின் சந்தேகப் பட்டியலில் உள்ளனர். விரைவில் மேலும் சில கைது நடவடிக்கைகள் நடக்க உள்ளன என்கிறது போலீஸ் வட்டாரம்.
from தேசிய செய்திகள் https://ift.tt/drz8Ob5
0 Comments