உத்தரப்பிரதேசத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்று ஆங்கில எழுத்துக்களில் இருந்து வரலாறு, புராண அறிவை வழங்கும் நோக்கத்துடன் அல்பபெட்ஸை (alphabets) வித்தியாசமான முறையில் பயன்படுத்தியிருப்பதாக சொல்லப்படும் சம்பவம் பேசுபொருளாக மாறியிருக்கிறது. A என்ற எழுத்திற்கு ஆப்பிள் என்று படித்திருப்போம். ஆனால் சற்று வித்தியாசமாக A என்ற எழுத்திற்கு அர்ஜூனா என பள்ளியின் பாடபுத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் உள்ள அமினாபாத் இன்டர் என்ற தனியார் பள்ளியில், மாணவர்களுக்கு ஆங்கில எழுத்துகளுக்கு வழங்கப்படும் அல்பபெட்ஸ் (alphabets) ABC.. தொடரில் A என்ற எழுத்திற்கு அர்ஜூனா, B என்ற எழுத்திற்கு பலராமா, C என்ற எழுத்திற்கு சாணக்கியா, D என்ற எழுத்திற்கு துருவன், E என்ற எழுத்திற்கு ஏக்லைவ்யா, F என்பது நான்கு வேதங்கள், G என்ற எழுத்து காயத்ரி, H என்ற எழுத்து ஹனுமான், I என்ற எழுத்து இந்திரன் என்றும் பாட புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறது.
இதுபோல ஒவ்வொரு ஆங்கில எழுத்திற்கும் இந்து புராணங்களிலும், வரலாறுகளிலும் உள்ள குறிப்பிடத்தக்க நபர்களின் பெயரை வைத்துள்ளனர். மேலும், பள்ளியால் உருவாக்கப்பட்ட எழுத்துக்கள் விளக்கப்படத்தில் புராண, வரலாற்று நபர்களின் பெயர்கள், படங்கள் இருப்பது மட்டுமல்லாமல், அவர்களை குறித்த விளக்கங்களையும் குறிப்பிட்டிருக்கிறது. உதாரணமாக, அர்ஜூனன் ஒரு 'சிறந்த போர்வீரன்' என்றும், சாணக்யா 'சிறந்த ஆசிரியர்' என்றும் விவரிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், இது தொடர்பாக பேசிய பள்ளியின் முதல்வர் சாஹேப் லால் மிஸ்ரா, ``மாணவர்களுக்கு இந்திய கலாசாரம் பற்றிய அறிவு குறைவாக இருக்கிறது. எனவே மாணவர்களின் அறிவை மேம்படுத்தவும், இந்திய கலாசாரத்தை எடுத்துரைக்கும் வகையிலும் நாங்கள் இந்த புது முயற்சியை மேற்கொண்டுள்ளோம். இந்தி எழுத்துக்களிலும் இதே முறையைப் பின்பற்ற முயற்சி செய்து வருகிறோம். இந்தியில் அதிக எழுத்துக்கள் இருப்பதால், அதன் செயல்முறைக்கு அதிக நேரம் தேவைப்படுகிறது'' என்றார்.
இந்த பள்ளி, 1897 இல் நிறுவப்பட்டது. இது 125 ஆண்டுகள் பழமையானதாகும். இந்த பாட புத்தகம் குறித்தான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி, பேசு பொருளாக மாறிவருகிறது.
from தேசிய செய்திகள் https://ift.tt/ZPDCxeU
0 Comments