ஆந்திரா டு கேரளா... ஜீப்பில் ரகசிய அறைகள் அமைத்து கடத்தப்பட்ட 67 கிலோ கஞ்சா! - சிக்கியது எப்படி?

தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களை இணைக்கும் முச்சந்திப்பு பகுதியாக இருக்கிறது நீலகிரி. இந்த வழித்தடத்தில் அதிகம் குட்கா, கஞ்சா கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அவ்வப்போது சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து கேரள மாநிலம் மலப்புரத்துக்கு காரில் கஞ்சா கடத்துவதாக காளிகாவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. இதன் காரணமாக மலப்புரம், செருதோடு பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். அந்த சாலையில் வந்த ஜீப் ஒன்றை நிறுத்தி சோதனை செய்ய முயற்சி செய்துள்ளனர். அப்போது ஜீப்பில் இருந்த அனைவரும் தப்பி ஓடியுள்ளனர். ஒருவரை மட்டுமே பிடிக்க முடிந்தது. மற்றவர்கள் தலைமறைவாகியுள்ளனர்.

கஞ்சா பறிமுதல்

ஜீப்பில் சோதனை மேற்கொள்கையில் அதனுள் ரகசிய பெட்டி போன்ற பல அறைகளை அமைத்து அதனுள் கஞ்சாவை பதுக்கி கடத்தி வந்திருப்பதை கண்டறிந்துள்ளனர். கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஜீப்பையும் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட நபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கடத்தல் சம்பவம் குறித்து களிகாவு போலீஸார், "ஆந்திராவில் இருந்து கர்நாடகா, நீலகிரி வழியாக கேரளாவுக்கு ஜீப்பில் ரகசிய அறைகள் அமைத்து 67 கிலோ கஞ்சாவை கடத்தி வந்துள்ளனர். இதன் மதிப்பு பல லட்சங்கள் இருக்கும்.

கூடலூர் மண்வயலைச் சேர்ந்த ஜஸ்டின் என்ற 28 வயது இளைஞரை கைது செய்து விசாரித்து வருகிறோம் " என தெரிவித்துள்ளனர்.



from தேசிய செய்திகள் https://ift.tt/umDhZ89

Post a Comment

0 Comments