வயிற்றில் சர்ஜிகல் மாப் வைத்து தைத்த மருத்துவர்கள்; போராட்டம் நடத்தி ரூ.20 லட்சம் நஷ்டஈடு பெற்ற பெண்

கர்நாடக மாநிலம், பெங்களூரின் உடுப்பி பகுதியைச் சேர்ந்த 31 வயதான பெண், கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை 29 -ம் தேதி பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். சி-பிரிவு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, பெண் குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறார். அதன்பிறகும் அந்தப் பெண் அடிவயிற்று வலியால் சிரமப்பட்டிருக்கிறார். இதையடுத்து, தனக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்களை அணுகி தன்னுடைய நிலைமை குறித்துத் தெரிவித்திருக்கிறார். ஆனால் மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்குப் பின்பு வரும் சாதாரண வலி எனக் கூறி அனுப்பியிருக்கிறார்கள்.

பிரசவம்

இதையடுத்து, அந்தப் பெண் மற்றொரு மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து, அவருக்கு செப்டம்பர் 24, 2018-ல் இரண்டாவது முறையாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பிறகும் அந்தப் பெண்ணின் மார்பு பகுதியில் வலி இருந்திருக்கிறது. அதனால் குழந்தைக்குப் பால் கொடுப்பதற்குச் சிரமப்பட்டிருக்கிறார். இதையடுத்து, இவருடைய கணவர் பெங்களூரிலுள்ள ஆயுர்வேத நிபுணரை அணுகினார். அவர் எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்கப் பரிந்துரைத்திருக்கிறார். அப்போதுதான் உண்மையான பிரச்னை என்ன என்பது கண்டறியப்பட்டது.

நீதிமன்ற உத்தரவு

அந்தப் பெண்ணின் வயிற்றுக்குள் அறுவை சிகிச்சையின்போது சர்ஜிகல் மாப் (அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் பஞ்சு) வைத்து தைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதையடுத்து, கஸ்தூரிபா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, மூன்றாவது அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அந்த சர்ஜிகல் மாப் வயிற்றிலிருந்து அகற்றப்பட்டது. இது தொடர்பாக நுகர்வோர் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட பெண் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அந்தப் பெண்ணுக்கு மருத்துவமனை நஷ்டஈடாக ரூ.20 லட்சம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/jCJxWOQ

Post a Comment

0 Comments