``மது போதையில் இருந்தேன்; இந்த பாம்பு கடித்துவிட்டது” - இறந்த ராஜ நாகத்தை கையில் எடுத்து வந்த நபர்

உத்தரப்பிரதேசம் மாநிலம் குஷிநகரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு மது போதையில், இறந்த ராஜ நாகத்துடன் ஒருவர் வந்திருக்கிறார். அவர் பத்ரூனாவில் வசிக்கும் சலாவுதீன் மன்சூரி (35) என்று அடையாளம் காணப்பட்டார். அவரை பார்த்த மருத்து ஊழியர்கள் பதற்றமடைந்து ஓடியிருக்கிறார்கள். உடனே, பாம்பு இறந்துவிட்டதை தெளிவுபடுத்தியிருக்கிறார். அதன் பிறகு அவர் கூறிய தகவல்கள் மருத்துவர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. அவர் கூறியதாவது, "நான் பத்ரௌனா ரயில் நிலையம் வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போது நான் மது போதையில் இருந்தேன். எனக்கே தெரியாமல் ராஜ நாகத்தை மிதித்ததால் என் காலில் கடித்துவிட்டது.

நாகம்

உடனே அதை எனது வெறும் கைகளால் பிடித்து, "நான் இறந்துவிடுவேன், ஆனால் உன்னையும் வாழ விடமாட்டேன்" என்று அதை பலமுறை அடித்தேன். அப்போதுதான் அது என் கையையும் கடித்துவிட்டது" எனத் தெரிவித்திருக்கிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவர்கள், "இறந்த ராஜ நாகத்தை அவசர சிகிச்சை பிரிவில் கொண்டு வந்தபோது, ​​மருத்துவர்கள் எதுவும் பேச முடியாமல் திணறினர். அவர் கிட்டத்தட்ட மூன்றடி நீளமுள்ள ராஜ நாகத்தை கொண்டுவந்திருந்தார். பாம்புக்கடிக்கு சிகிச்சையளிக்க ஆன்டி-வெனம் ஊசி போட வேண்டும் என்றும் கூறிக்கொண்டே இருந்தார்.

பாம்பு

ராஜா நாகம் உலகின் மிகப்பெரிய விஷ பாம்பு , இது 18 அடி நீளம் வரை வளரும் திறன் கொண்டது. அதன் விஷம் 15 முதல் 20 மனிதர்களைக் கொல்லுவதற்கு போதுமானது. ஒரு யானையைக் கூட கொல்லும் நியூரோடாக்சின் அதிக அளவு அதனிடம் இருக்கின்றன. அந்தப் பாம்பு இரண்டு முறை கடித்தும் அவரின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பது மகிழ்ச்சியளிக்கிறது. பாம்பு கடித்து இறந்தவர்களை தான் பார்த்திருக்கிறோம். முதல்முறையாக மனிதனை கடித்த பாம்பு இறந்தது இப்போது தான் கேள்விபடுகிறேன்" எனத் தெரிவித்தார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/E7Txrye

Post a Comment

0 Comments