கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் மீன் வியாபாரி பூக்குஞ்சு (வயது 40). இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு வீடு கட்டுவதற்காக கார்பரேஷன் வங்கியிலிருந்து ரூ.7.45 லட்சம் கடன் பெற்றிருக்கிறார். மிகவும் ஏழ்மை நிலையிலிருந்த இவர், கடன் தொகையைத் திரும்பச் செலுத்த முடியாமல் சிரமப்பட்டிருக்கிறார். இதன் காரணமாக அவர் வாங்கிய கடன் வட்டியுடன் சேர்ந்து ரூ.12 லட்சமாக அதிகரித்துவிட்டது.
இதனையடுத்து, வீடு கட்டுவதற்கு வாங்கிய கடனை உரிய நேரத்தில் திரும்பச் செலுத்தாவிட்டால் வீடு ஜப்தி செய்யப்படும் என வங்கியிலிருந்து இவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. வங்கி நோட்டீஸை கண்டு இவருடைய குடும்பமே மனவேதனையில் இருந்திருக்கின்றனர்.
வங்கி நோட்டீஸுக்குப் பிறகு கடனை அடைக்க வீட்டை விற்பனை செய்துவிட தம்பதியினர் யோசித்திருக்கின்றனர். ஆனால் குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து மிகுந்த மனவேதனை அடைந்து செய்வதறியாது திகைத்து நின்றனர்.
இந்த நிலையில், அடுத்த சில மணி நேரத்தில், லாட்டரியில் பூக்குஞ்சுக்கு ரூ.70 லட்சம் கிடைத்திருப்பதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. ஆனால் பூக்குஞ்சுவால் இதை நம்ப முடியவில்லை. அதன் பிறகு எண்களை சரிபார்த்த பிறகே நம்பியிருக்கிறார். இந்தப் பணத்தை கடனை அடைக்க பயன்படுத்தப் போவதாகவும், தங்களுடைய குழந்தைகளின் கல்வி செலவுக்குப் பயன்படுத்தப் போவதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/qiwBso1
0 Comments