உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி நகரத்திற்கு வெளியில் செயல்படும் ரேயான் இண்டர்நேசனல் பள்ளியின் பேருந்துகள் அங்குள்ள சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அந்நேரம் மலைப்பாம்பு ஒன்று அக்கிராமத்தில் ஆட்டுக்குட்டி ஒன்றை அப்படியே சாப்பிட்டுவிட்டு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பள்ளி பேருந்தில் ஏறிக்கொண்டது. இதை நேரில் பார்த்த கிராம மக்கள் இது குறித்து பள்ளி ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் பாம்பை பிடிக்க வனத்துறையினருக்கு தகவல் கொடுத்து வரவழைத்தனர். வனத்துறை ஊழியர்கள் வந்தபோது பாம்பு இருக்கை ஒன்றுக்கு அடியில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தது. உடனே பாம்பை குச்சியால் குத்தி அதனை சம்பவ இடத்தில் இருந்து நகரும்படி செய்தனர்.
பாம்பு பிடிப்பவர்கள் அந்த பாம்பை சாக்குமூட்டைக்குள் அனுப்ப முயன்றனர். ஆனால் அந்த பாம்பு சாக்குமூட்டையை கடிக்க முயன்றது. வனத்துறையினரின் இந்த முயற்சியில் பாம்பு பஸ் எஞ்சினில் சிக்கிக்கொண்டது. இதனால் பாம்பை மீட்க அதன் உடலில் ஒரு கயிறு கட்டி வெளியில் இழுத்தனர். ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு பாம்பு பிடிபட்டது. பாம்பை வனத்துறையினர் பத்திரமாக எடுத்துச்சென்றனர் இச்சம்பவத்தை தொடர்ந்து பள்ளி பேருந்து சம்பவ இடத்தில் இருந்து அகற்றப்பட்டு பள்ளி அருகில் வேறு இடத்தில் கொண்டு போய் நிறுத்தப்பட்டது. இச்சம்பவத்தால் அங்கு பெரும்பரபரப்பு ஏற்பட்டது. ஆட்டுக்குட்டியை பாம்பு சாப்பிட்டது என்று கிராம மக்கள் கூறுகின்றனர். ஆனால் அது உண்மையா என்று தெரியவில்லை என்கிறார்கள் வனத்துறையினர்.
from தேசிய செய்திகள் https://ift.tt/ZkrqC9m
0 Comments