மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் இந்தியில் மொழிபெயற்கப்பட்ட முதலாம் ஆண்டு MBBS பாட புத்தகங்களை உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டு, இந்தி மொழியில் மருத்துவ கல்வி திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும், மத்தியப்பிரதேசத்தில் இருக்கும் 13 மருத்துவக் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு உடற்கூறியல், உடலியல், உயிர் வேதியியல் ஆகிய 3 இளநிலை மருத்துவப் படிப்புக்கான பாடங்கள் இந்தியில் கற்பிக்கப்படவுள்ளன.
இந்த நிலையில், இந்தியில் மருத்துவக் கல்வி அளிக்கும் மத்தியப்ப்பிரதேச அரசின் முயற்சியினை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டி, தனது ட்விட்டர் பக்கத்தில், "மருத்துவக் கல்வித் துறையில் இந்த ஆரம்பம் நாட்டில் ஒரு பெரிய நேர்மறையான மாற்றத்தை கொண்டு வரப்போகிறது. இதன் மூலம் லட்சக்கணக்கான மாணவர்கள் தங்கள் சொந்த மொழியில் படிக்க முடியும், அவர்களுக்கு பல வாய்ப்புகளின் கதவுகள் திறக்கப்படும்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இதைத் தொடர்ந்து, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது ட்விட்டர் பக்கத்தில், "உத்தரப் பிரதேசத்தில் உள்ள சில மருத்துவம் மற்றும் பொறியியல் புத்தகங்கள் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது. வரும் ஆண்டு முதல், இந்த பாடங்களின் படிப்புகள் மாநிலத்தின் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இந்தியில் படிக்க கிடைக்கும்," எனத் தெரிவித்திருக்கிறார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/RFqd6wO
0 Comments