மத்தியப் பிரதேச மாநிலம், பர்வானி மாவட்டத்தில் தன் நண்பரின் 8 வயது பெண் குழந்தையைக் கடத்தி பாலியல் வன்கொடுமைசெய்த நபரை காவல்துறையினர் கைதுசெய்தனர்.
இந்த அதிர்ச்சி சம்பவம் ஊடகங்களுக்குப் பேட்டியளித்த அந்தப் பகுதி காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஷ் யாதவ், ``கைதுசெய்யப்பட்ட நபர் கடந்த புதன்கிழமை (12-10-22) அந்த சிறுமி பயிலும் பள்ளிக்கு வெளியே அவரை பார்த்திருக்கிறார். `அப்பாவிடம் அழைத்துச் செல்கிறேன், வா...' என்று கூறி சிறுமியைக் கடத்திச் சென்றிருக்கிறார்.
பின்னர் அந்தச் சிறுமியை அருகிலுள்ள கோட்டை ஒன்றுக்குக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். சிலர் துப்பு கொடுத்ததன் பேரில் காவல்துறை சோதனையில் ஈடுபட்டபோது அந்தச் சிறுமி மீட்கப்பட்டார். அந்தச் சிறுமி தனக்கு நடந்த கொடுமையைப் பெண் அதிகாரி ஒருவரிடம் கூறினார். இதையடுத்து, காவல்துறை நடத்திய தேடுதல் வேட்டையில் தப்பிச் செல்ல முயன்ற குற்றவாளியை மும்பை-ஆக்ரா சாலையில் வைத்துக் கைதுசெய்தோம்" என்றார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/nVjOLpE
0 Comments