கர்நாடகாவின் பிலிகிரிரங்கனா மலை வனப்பகுதியில் குட்டி ஆண் யானை ஒன்று வழி மாறி, தாயை விட்டுப் பிரிந்து அருகிலிருந்த ஒரு கிராமத்துக்குள் நுழைந்திருக்கிறது. பின்னர் அந்த யானைக் குட்டி அங்கிருந்த அரசுப் பள்ளி ஒன்றுக்கு அருகில் சென்றிருக்கிறது. யானைக் குட்டியைக் கண்டு உற்சாகத்தில் திளைத்த பள்ளி மாணவர்கள், குட்டி யானை களைப்பாக காணப்பட்டதால் அதற்கு பால், பழங்களை சாப்பிடக் கொடுத்திருக்கின்றனர்.
தாயைப் பிரிந்து பசியில் இருந்த அந்தக் குட்டி, சிறுவர்கள் அளித்ததை சாப்பிட்டுவிட்டு அவர்களுடன் அங்கேயே விளையாடிக் கொண்டிருந்திருக்கிறது. யானைக் குட்டி வந்திருக்கும் தகவலறிந்து அங்கு விரைந்த கிராம மக்கள் அதை ஆச்சர்யமாக பார்த்தனர். இதற்கிடையில் வனத்துறைக்கு யானைக் குட்டி தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அங்கு விரைந்த வனத்துறை அதிகாரிகள், சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த குட்டியை மீட்டு, அதன் தாயை தேடும் பணியில் இறங்கினர்.
The photos of an #elephant calf, which got separated from its mother, playing and enjoying with children of a residential school in the #Puranipodi village of Chamarajanagar district has gone viral on social media. pic.twitter.com/sgrvX2ZceH
— IANS (@ians_india) September 6, 2022
பல மணி நேர தேடலுக்குப் பிறகு தாய் யானை ஒன்று தன்னுடைய குட்டியை தேடிக் கொண்டிருந்ததை கண்டறிந்தனர். அதையடுத்து, அந்தக் குட்டி யானையை பத்திரமாக தாய் யானையுடன் சேர்த்தனர். வழி மாறி கிராமத்துக்குள் புகுந்த குட்டி யானை, தன்னுடைய தாயைக் கண்டதும் உற்சாக மிகுதியில் அதனுடன் சென்றது.
குட்டி யானை பள்ளி மாணவர்களுடன் விளையாடிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றன.
from தேசிய செய்திகள் https://ift.tt/PL2KsQd
0 Comments