கர்நாடகா: குடியிருப்பை சூழ்ந்த வெள்ளம்; ஓட்டை பிரித்து பச்சிளம் குழந்தையுடன் மீட்கப்பட்ட தாய்! Video

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கி பெய்து வருகிறது. அந்த மாநிலத்தின் தலைநகர் பெங்களூருவிலும் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. கடந்த சில தினங்களில் பெய்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. தொடர் மழையால் மாநிலத்தில் அணைகள், ஏரி, குளங்கள் உட்பட நீர் நிலைகள் நிரம்பிவருகின்றன. இந்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது.

அந்த வகையில், வட கர்நாடகாவின் பெலகாவியில் உள்ள கோகாக்கில் செவ்வாய்க்கிழமை பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அந்தப் பகுதியில் வெள்ளம் சூழ்ந்திருப்பதால் ஏராளமானோர் சிக்கித் தவித்து வருகின்றனர். இந்த நிலையில், அந்தப் பகுதில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த தாய், பிறந்து 12 நாள்களே ஆன பச்சிளம் குழந்தையை, உள்ளூர்வாசிகள் பத்திரமாக மீட்டனர். குடியிருப்பை வெள்ளம் சூழ்ந்து விட்டதால், வெளியேற முடியாமல் தவித்த தாய், சேய் இருவரையும் கிராமமக்கள் வீட்டின் ஓட்டை பிரித்து மீட்டு, பாதுகாப்பான இடத்தில் தங்கவைத்தனர். இது தொடர்பான மீட்பு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.



from தேசிய செய்திகள் https://ift.tt/Oby2g3N

Post a Comment

0 Comments