டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்த்ரி சாலை விபத்தில் மரணம்!

டாடா சன்ஸ் நிறுவனங்களின் தலைவராக இருந்தவர் சைரஸ் மிஸ்த்ரி. இவர் தற்போது பிரபல கட்டுமான நிறுவனமான சாபூர்ஜி பாலோன்ஜி நிறுவனத்தின் தலைவராக பதிவு வகித்து வந்தார். மிஸ்த்ரி இன்று குஜராத் மாநிலம், அகமதாபாத்திலிருந்து மும்பைக்கு தனது மெர்சிடிஸ் காரில் வந்து கொண்டிருந்தார். கார் பிற்பகல் 3:15 மணிக்கு மும்பை அருகில் உள்ள பால்கர் என்ற இடத்தில் இருக்கும் சூர்யா ஆற்றுப்பாலத்தின்மீது வந்தபோது விபத்துக்குள்ளானது. இதில் சைரஸ் மிஸ்த்ரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 54 ஆகும். அவருடன் வந்த டிரைவர் உட்பட இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சைரஸ் மிஸ்த்ரியின் கார் சாலை டிவைடரில் மோதி விபத்துக்குள்ளானதாக பால்கர் போலீஸார் தெரிவித்துள்ளனர். மரணமடைந்த சைரஸ் மிஸ்த்ரிக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

சைரஸ் மிஸ்த்ரி

சைரஸ் மறைவுக்கு தொழில் துறையினர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் ஆழ்ந்த இரங்கலும், அதிர்ச்சியும் தெரிவித்துள்ளனர். சரத் பவார் மகள் சுப்ரியா சுலே வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், ``சகோதரர் சைரஸ் மிஸ்த்ரி இறப்பு அதிர்ச்சியளிக்கிறது. அவர் இழப்பை நம்பமுடியவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார். டாடா சன்ஸ் நிறுவனத்தில் சைரஸ் மிஸ்த்ரியின் சாபூர்ஜி பாலோன்ஜி நிறுவனத்துக்கு அதிக பங்குகள் இருக்கின்றன.

டாடா

அதனடிப்படையில் 2012-ம் ஆண்டு ரத்தன் டாடா தலைவர் பதவியிலிருந்து விலகியபோது சைரஸ் மிஸ்த்ரி டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால் அவரின் செயல்பாடுகளைக் காரணம் காட்டி 2016-ம் ஆண்டு டாடா சன்ஸ் நிர்வாகம் சைரஸ் மிஸ்த்ரியை தலைவர் பதவியிலிருந்து நீக்கியது. புதிய தலைவராக சந்திரசேகரன் நியமிக்கப்பட்டார். தன்னை பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்து சைரஸ் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/JPr8tpa

Post a Comment

0 Comments