கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி குடகுக்கு சென்ற சித்தாராமையா, கொட்லிப்பேட்டையில் உள்ள பசவேஸ்வரா கோயிலுக்கு அசைவ உணவு சாப்பிட்டுவிட்டு சென்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு பாஜக தரப்பு கடுமையாக கண்டனம் தெரிவித்திருந்தது. இது தொடர்பாக பா.ஜ.க-வின் மூத்த எம்.எல்.ஏ பசங்கவுடா பாட்டீல் யத்னால், ``தேர்தல் வருவதால் கோயிலுக்கு செல்வது போல நாடகம் நடத்துகிறார் சித்தராமையா. அவருக்கு தைரியம் இருந்தால் பன்றி இறைச்சி சாப்பிட்டுவிட்டு பள்ளிவாசலுக்கு செல்ல சொல்லுங்கள் பார்க்கலாம்... ” என விமர்சித்திருந்தார்.
பா.ஜ.கவின் விமர்சனத்துக்கு பதிலளித்த கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா, ”இறைச்சி சாப்பிடுவது பிரச்னையா? அது ஒவ்வொருவரின் தனிப்பட்ட உணவுப் பழக்கம். நான் இறைச்சி மற்றும் சைவ உணவு இரண்டையும் சாப்பிடுகிறேன். அது எனது பழக்கம். சிலர் இறைச்சி சாப்பிடுவதில்லை, ஆனால் அதை சாப்பிடுபவர்களை நான் எதிர்க்கவில்லை. அது அவர்களின் உணவுப் பழக்கம். சிலர் இறைச்சி சாப்பிட்டுவிட்டு கோயிலுக்கு செல்கிறார்கள். பலர் சாப்பிடாமல் செல்கிறார்கள். பல இடங்களில் தெய்வங்களுக்கு இறைச்சி பிரசாதமாக வழங்கப்படுகிறது.
உண்மையைச் சொன்னால் நான் அன்று கோழிக்கறி இருந்தாலும், இறைச்சி சாப்பிடாமல் மூங்கில் கறி மற்றும் அக்கிரொட்டியை மட்டுமே சாப்பிட்டு தான் கோயிலுக்கு சென்றேன். அதைத் தானே அன்றும் கூறியிருகிறேன். எனது கிராமத்தில் உள்ள கோயில்களுக்கு செல்கிறேன்.
முக்கிய பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப இது போன்று கடவுளை முன்வைத்து அரசியல் செய்கிறார்கள். அதற்காக சர்ச்சைகளை தொடர்ந்து உருவாக்க முயற்சி செய்கிறார்கள். ஏனென்றால், பா.ஜ.க-வுக்கு அதைவிட வேறு வேலை இல்லை.” எனத் தெரிவித்தார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/UTRQ8cC
0 Comments