`பெண்ணின் அரைகுறை ஆடை... பாலியல் சீண்டல் குற்றமில்லை'; சர்ச்சைக்குரிய கருத்தும் பணியிட மாற்றமும்!

பெண் பாலியல் உணர்வைத் தூண்டும் வகையில் ஆடை அணிந்ததாகக் கூறி, பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி எஸ். கிருஷ்ணகுமார் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Woman Abuse

எழுத்தாளரும் ஆர்வலருமான சிவிக் சந்திரன் என்பவர் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் மீது இரண்டு பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் உள்ளன. 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொச்சியில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த எழுத்தாளரையும், 2020 பிப்ரவரியில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் ஓர் இளம் எழுத்தாளரையும் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த இரண்டு வழக்குகளிலும் நீதிபதி எஸ்.கிருஷ்ணகுமார் முன்ஜாமீன் வழங்கினார். முதல் வழக்கில் ஆகஸ்ட் 2-ம் தேதி முன்ஜாமீன் வழங்கப்பட்டது. இரண்டாம் வழக்கின் விசாரணையில், சிவிக் சந்திரன் தரப்பில் கொடுக்கப்பட்ட புகைப்பட ஆதாரங்களில், `அப்பெண் பாலியல் ஆர்வத்தைத் தூண்டும் வகையில், உடல் பாகங்கள் தெரியும்படி உடை அணிந்துள்ளதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர் 74 வயதான மாற்றுத் திறனாளி, அப்படி இருக்கும் பட்சத்தில் அவரின் மடியில் அந்தப்பெண் அமர்ந்திருக்கிறார். கட்டாயப்படுத்தி அப்பெண்ணை அமர வைத்து பாலியல் துன்புறுத்தல் செய்ய அவரால் எப்படி முடியும் எனக் கூறி, பாலியல் துன்புறுத்தல் வழக்குகளுக்கான சட்டப்பிரிவு 355 A -ன் கீழ் இந்த வழக்குப் பொருந்தாது’ எனத் தெரிவித்து அவருக்கு ஜாமீன் வழங்கி உள்ளார்.

பாலியல் வன்கொடுமை

``பெண், பாலியல் ரீதியான செயல்பாட்டைத் தூண்டும் வகையில் ஆடை அணிந்திருப்பின், அவரை பாலியல் துன்புறுத்தல் செய்தால் குற்றமாகாது'' என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பு பலரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து, கேரள அரசு இந்த இரண்டு ஜாமீன்களுக்கும் எதிராக தன்னுடைய கருத்தைப் பதிவு செய்தது. இரண்டாவது ஜாமீனுக்கு எதிராக கேரள அரசுத் தரப்பிலிருந்து மனு தொடுக்கப்பட்டது. அதில் ``வழக்கின் உண்மையை ஆராயாமல், நீதிமன்றத்தின் தீர்ப்பு நியாயமற்றது எனக் கூறி நீதிமன்றம் தெரிவித்த கருத்துகளை நீக்க கோரியது.

நீதிமன்றம்

அதன் பிறகு, முரணான கருத்தைத் தெரிவித்த நீதிபதி எஸ். கிருஷ்ணகுமார் கொல்லத்தில் உள்ள தொழிலாளர் நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். கேரள உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் இந்த உத்தரவிற்கு கையொப்பமிட்டார். மஞ்சேரி மாவட்ட அமர்வு நீதிபதி எஸ். முரளி கிருஷ்ணா, தற்போது கோழிக்கோடு மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/qtnLFhI

Post a Comment

0 Comments